பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பேயனர்

பிறந்தான்் ” என்றவொரு கதையையும் கட்டிவிட்டுளார். கிற்க.

கரிகாலன் தந்தை, உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் கொன்ற தாயத்தார், கரிகாலனையும் சிறையி லடைத்து விட்டனர்; கரிகாலனும், கூட்டுள் வளரும் புலிக்குட்டியேபோல், சிறையுள் வளர்ந்து பெரியவனுயி னன்; மேலும் சிறையுள் அடைபட்டிருக்க விரும்பாத அவன், ஒருநாள் எவரும் எதிர்பாரா வண்ணம், சிறைக் காவலரைக் கொன்றும், காவலை அழித்தும் வெளியேறினன் : அக்காலை, அவன் வெளியேருவண்ணம் தடுத்து கிறுத்த, அச்சிறையைச் சூழ அவன் பகைவர் எழுப்பிய தீயால், அவன் கால்களும் கரிந்து போயின; அதனலேயே அவன் கரிகாலன் என அழைக்கப் பெற்ருன்; வெளிப் போர்த கரிகாலன், தன் வாள் துணையால் தன் பகையாய் வந்த காயத்தார் அனைவரையும் அழித்து, அர சியலைக் கைப்பற்றி ஆள லாயினன்.

சோளுடாளும் அரசனும் சிறுவன் ; அக்காட்டில் அமைதியும் குன்றியுளது ; ஆகவே அக்காட்டைக் கைப் பற்றற்கு ஏற்ற காலம் இதுவே எனக் கருதிய சேரனும், பாண்டியனும், குறு சில மன்னர் பதினுெருவரையும் துணை யெனக் கொண்டு, கரிகாலனை எதிர்த்தனர் ; கரிகாலன் அவர்களே வெண்ணியெனும் ஊரில் எதிர்த்துப் போரிட்டு வென்று பெருமையுற்ருன் ; வெண்ணியில் பெற்ற வெற்றி, உலகத்தார் உளத்தே உவகைப் பெருக்கை ஊற்ருேடச் செய்த சின்னுட்களுக்குள், வாகை எனும் இடத்தே வந்த எதிர்த்த ஒன்பது பேரரசர்களேயும் ஒரே பகலில் அழித்து, அழியாப் புகழ்பெற்ருன்; இவ்விரு பெரும் வெற்றிசு ளோடு, அவன் போர் வேட்கை தணிந்திலது ; தொண்டை காட்டை ஆண்டிருந்த அருவாளரையும், சோரையும், பாண்டியரையும், ஒளியர், பொதுவர் முதலாயினுோையும் வென்முன்; இவ்வாறு தன் நாட்டைச் சூழ இருந்த அரசு களை அழித்து ஆட்கொண்ட கரிகாலன், வடகாடு நோக் கிச் சென்ருன்; ஆண்டுள்ள, வச்சிரம், மகதம், அவந்தி