பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. ஐயாதிச் சிறுவெண்தேரையார்

முற்காலத்தும், பிற்காலத்தும் வாழ்ந்த புலவர்கள் எல்லாம் விரும்பி மேற்கொண்ட பெயர்களுள் தேரையாள் என்பதும் ஒன்று பதார்த்தகுண சிந்தாமணி என்னும் நூலே எழுதியவரும் ஒரு தேரையார் என்பது உணர்க. ஐயாதிச் இறுவெண் தேரையார், ஊர்ப்பெயர் குறிக்கப் பெருமல், சிறுவெண் தேரையார் என அழைக்கப்பெறு: தலும் உண்டு. இவர் பிறந்த ஊர் ஐயாதி எனும் பெய. ருடையது. அஃது யாண்டுளது என்பதை அறிதற்கு இல்லை. தொண்டைநாட்டு ஊர்களுள் ஒன்ருய சலவாறு என்பது, சலவாரி என வழங்கப்பெறுதல்போல், இவ்: ஐயாதி என்பதுவே இடைக்காலத்தில் ஐயாறு என ஆயிற்ருே என எண்ணுதற்கும் இடனுண்டாம். வேந்தர் தம் போர் வேட்கைக்காம் காரணம் குறித்தும், கிலேயாமை. கூறி அறம் வலியுறுத்தல் குறித்தும் இவர் பாடிய பாக்கள்

மிகமிக அழகுடையனவாம். -

உலகிற் பிறந்தார் ஒவ்வொருவரும் இம்மையில் உயர் பெரும்புகழ் பெற்று வாழவும், மறுமையில் மாற்ருரும். மகிழ்ச்சிநிறை மறையோர் உலகெய்தி இன்புறவும் எண்ணும் இயல்பினராவர் ; உலகில் புகழ் உண்டாதல், அந்தணர் முதலாம் அறிஞர் பெருமக்கட்கு நாடு பல நல்குவ. தாலும், இரவலர்க்குச் சோறளிப்பதாலும், பரிசிலர்க்குப் பொருள் பல அளிப்பதாலும் ஆம் அது, பெரும்பொருள் உடையார்க்கே இயலும் அப்பொருள் பகைவர் நாட்டைப் பாழாக்கிப் பெறுதலாலேயே பேரரசர்க்குண்டாம்; உம்பர் உலகில் உடலோடு சென்று உறைதல், போரிற் பெற்ற: புண் உடையார்க்கும் உண்டாம். ஆக எவ்வகை நோக் கினும், இம்மையிற் புகழும், மறுமையில் இன்பமும் பெறத் துணைபுரிதல் போரேயாதல் புலம்ை. ஆகவே, அரசர் போர் மேற்கொள்வதில் பெருவிருப்பினராகின்றனர்; அரசர் மேற்கொள்ளும் அப்போர்ச்செயல், அருள்நெறிக்கு. அப்பாற்பட்டது ஆகலின், அது அருள்நெறி உரைக்கும் நூல்களுள் கூறப்படுவதில்லை. அது புறத்துறை