பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அஞ்சில் ஆந்தையார்

இவர், அஞ்சில் என்ற ஊரிற் பிறந்து, ஊரார் ப்ோற்ற வாழந்த ஆதன் என்பாரின் தந்தையாரர்வர். ஆதன்+ தந்தை என்ற இரு சொற்ளும், "இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின் முதற்கண் மெய்கெட அகரம் கிலேயும் மெய்யொழித்து அன்கெடும் அவ்வியற் பெயரே" என்ற குத்திரத்தால், (தொல் எழுத்து; க.ச.எ. கிலேமொழி ஈற்று அன்கெட்டும், வருமொழி முதல் மெய்கெட்டும் ஆத்+அந்தை என்ருகி, 'ஆதனும், பூதனும் கூறிய இயல் பொடு பெயர் ஒற்று, அகரம் துவரக் கெடுமே” (தொல், :ை கூசஆ) என்ற குத்திரத்தால், நிலமொழி சற்றுத் தகர மெய்யும், வருமொழி முதல் அகர உயிரும் கெட்டு ஆந்தை என்ற ஒரு சொல்லாம் : ஆதன் என்ற சொல் சேரர் வழி வந்த ஒரு கிளேயினரைக் குறிக்க வழங்கும் சொல்லாதலின், இவரும் சோரோடு உறவுடைய ஒர் அரச மரபினர் எனத் தெளிக. அஞ்சியத்தை மகள் 5ாகையார் என்ற சொல் சில ஏடுகளில் அஞ்சிலாந்தை மகள் நாகையார் எனவும் காணப்படுதலேக்கொண்டு நாகையாரை ஆங்தையார் மகள் எனக்கொண்டு, ஆந்தையார் அறிவறிந்த ஆதனும் காகையும் ஆய இருபெரு மக்களேப்பெற்று மான்புற்ற வராவர் எனக் கூறுவாரும் உளர். -

தலைமகள் வேறு ; தான்் வேறு என்று கொள்ளாது, அவள் வாழ்வும் தாழ்வும், தன்னுடைய வாழ்வும் தாழ்வு மாம் எனக்கருதும் இயல்பினளரய தோழி, தலைமகள் காதலிக்கும் தலைவன், களவொழுக்கமே விரும்பும் கருத் துடையணுய் வரைந்துகொள்ளும் வேட்கையின்றி ஒழுகுவ தால், ஊரார் அலர், காய் காவல் ஆகியவற்ருல் தலைமகள் வருந்துவதை அறிந்து, தலைவன் ஒருநாள் வந்து சிறைப் புறமாக இருக்க, அவன் கேட்குமாறு, தலைமகளிடம் கூறு வாள்போல், 'தோழி கின்னுல் காதலிக்கப்படும் தலைவன், தன் உற்ருர் உறவினர் மாட்டுக் கொள்ளும் அன்பும், உலக உயிர்களிடத்துக் கொள்ளும் அருளும் உடையனல்லன்; பண்புகளால் கிறைந்த பெரியோர் சென்ற கன்னெறி செல்லும் கல்லொழுக்கமும் அவன்பால் இல்லை; அவன்பால்