பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GT = ஆலியார்

ஆலியார், ஆலி என்னும் ஊரிற் பிறந்தவராவர். சோழநாட்டின் உள்நாடுகளுள் ஆலிநாடு என்பதும் ஒன்று; அவ் ஆலிகாட்டின் தலைநகரே ஆலி இவ்வூர்ப் பெயர், திருவாலி எனவும் வழங்கப்பெறும் இது, சோழநாட்டில், சீர்காழியிலிருந்து திருவெண்காட்டுக்குச் செல்லும் வழியில் உளது. திருமால் அடியாராகிய திருமங்கை மன்னன் அவதரித்த பெருமையுடையது இவ் ஆலி அவரைத் திருவாலி காடர் என்றும் அழைப்பர்.

சில ஏடுகளில் ஆலியார் என்ற பெயர் ஆவியார் என்றும் காணப்படுதலைக்கொண்டு, இப்பெயர் ஊர்பற்றி வந்ததன்று குடிபற்றி வந்த பெயராம் என்று கூறுவர். மதுரை மாவட்டத்தில் பொதினி என்றொரு மலேயுண்டு. மக்கள் அதைப் பழனி என இப்போது வழங்குகின்றனர்; அது, ஆவினன்குடி என்ற பெயராலும் வழங்கப்பெறும். இத் திருவாவிநன்குடியினே ஆண்ட குறுகில மன்னராகிய வேளிர் ஆவியர் என அழைக்கப்பெறுவர் 'முருகன் நற்போர் நெடுவேள் ஆவி," "முழவுறழ் நெடுவேள் ஆவி' என அக்குடி வந்தாரைப் புலவர்கள் ஆவியர் எனப் பெயர் கூறி அழைத்துள்ளனர். .

பகைவர் அாணேச் சூழ்ந்துகின்ற படைவீரருள் ஒருவ கிைய தன்பால், அப்படையினே அழித்துக்கொள்ளும் பணியினே அளிக்காது மற்றொரு வீரன்பால் அளித்த அரசன் செயலால், தனக்கு வரும் புகழ் குறைந்துவிட்டது கண்ட வீரன் ஒருவன், 'அரசன் பின்பால் போன் புடையன்." எனப் பிறர் கூறியன எல்லாம் பொய்யே யாதல் இன்று அறிந்துகொண்டேன்; உண்டாட்டுக் காலங் களில் சிறப்பும், சுவையும் கிறைந்த கலங்கற்கள்ளே எனக்கு அளித்துவிட்டு, களிப்புக் குறைந்த தெளிந்த கள்ளைத் தான்் உண்ணும் அவன் செயலால், அவன் என்மர்ட்டுப்

ரன்புடையன் என்றே யானும் கருதினேன்; ஆனால்,

அரண்ழிக்கும் பணியினை என்பால் அளிக்காது