பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.46 மாநகர்ப் புலவர்கள்

கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி விருந்திறை யவரவர் எதிர்கொளக் குறுகிப் பரிபுலம் பலத்தரும் வருத்தம் வீட."(மலைபடு: சகஉ-எ) நன்னன் நாட்டில் பாய்ந்தோடும் ஆறு சேயாறு : இச்சேயாறு கிழ்க்குத்தொடர்ச்சி மலைகளில் சவ்வாது மலையிடத்தே தோன்றிச் செங்கம், திருவண்ணுமலை, போளுர், ஆரணி, செய்யாறு முதலாய வட்டங்கள் வழியே ஓடி, செங்கற்பட்டிற்கு அருகே பாலாற்ருேடு கலந்து விடுகிறது; இந்நதிக்குச் சண்முக நதி என்பதும் ஒரு பெயர் ; சிவந்த நீர் கொண்டுவருவதால் சேயாறு எனப் பெயர்பெற்றது என்பர் சிலர் : சேய் எனச் சிறப்பிக்கப் பெறும் முருகன் அருளால் வந்த ஆறு ஆதலின் சேயாறு எனப் பெயர்பெற்றது என்பர் வேறு சிலர். குயவன் திகிரிபோலும் சுழல்களைக்கொண்டு காண்பார்க்கு இனிய காட்சியாய் விரைந்தோடும் எனப் புலவரால் போற்றப் :பட்டுளது.

"வண்கலத் திகிரியிற் குமிழி சுழலும்

துனேசெலல் தலைவாய் ஒவிறந்து வரிக்கும் கானுகர் வயாஅம் கட்கின் சேயாறு." (மலைபடு: சஎச-சு) "கெடுவரை இழிதரும் நீத்தம்சால் அருவிக்

கடுவரம் கலுழிக் கட்கின் சேயாறு.” ( , ; இநச-டு) கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ! எனக் கூத்தர் தம் தலைவனை விளித்து, நன்னன்சேய் நன்னனே உள்ளிக் சேறிராயின், அவன் நாடு நோக்கிச் செல்லும் வழியின் இயல்புகளேயும், ஆங்கர்ங்கு விேர் தங்கவேண்டிய இடங் களேயும், அவன் காடுதரும் உணவுப்பொருள்களின் வகை களேயும், அவன் நாட்டுக் காடு, மலே, சோலே இவற்றின் புகளேயும், யான் கூறக்கேட்டுச் செல்லுவிராக எனத் ங்கி அவற்றின் இயல்புகளே விளக்கிக்கூறும் புலவர் சொல்லோவியம் கல்ல்ோவியமாம். அவர் காட்டிய ய சென்று, அவர் காட்டும் காட்சிகளேயும், அக் fக் காட்டும் அவுர் புலமையின் கலத்தினையும்