பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மாநகர்ப் புலவர்கள்

ஒருபால்; புனந்தொறும் கிளிகடிந்து நிற்கும் மகளிர் தட்டைகளைப் புடைப்பதால் எழும் பேரொலி ஒருபால்; முல்லைநிலக் கோவலரும், குறிஞ்சிகிலக் குறவரும் ஆனேற் றையும், மரையானின் ஏற்றையும் பொரவிட்டு, வெற்றி கண்டு எழுப்பும் ஆரவாரம் ஒருபால் எருமைகள் பல தாமே கூடிப் பொருது எழுப்பும் பேரொலி ஒருபால்; தின்று எஞ்சிய பலர்ப்பழத்தினின்றும் விதைகளைமட்டும் கொள்ளும் கொள்கையராய், அப் பழங்களேக் கீழிட்டுக் கன்றுகளைப் பிணித்துக் கடாவிடும் குறக்குடிச் சிறுவர்தம் குரலொலி ஒருபால் கரும்பாலேகளினின்றும் எழும் ஒசை ஒருபால்: தினேகொய்யும் மகளிர் பாடும் வள்ளைப் பாட்டு ஒருபால்; விதைத்த சேம்பையும், மஞ்சளேயும் தோண்டி உண்ணும் பன்றிகள் வாராவாறு எழுப்பும் பறையொலி ஒருபால்; ஈண்டுக் கூறிய இல் வொலிகளே எல்லாம் எதிரொலித்து எழும் மலைகளின் பேரொலி ஒரு பால் என்று ஈண்டு எடுத்துக்காட்டிய இவ் வொலிகள் எல்லாம், குறிஞ்சி கிலத்திற்குக் குன்ருச் சிறப்பளித்து கிற்றல் காண்க.

இவ்வாறு இடைவழியில் எழும் பேரொலிகள் இவை இவை என எடுத்துக்கூறிய புலவர், அவ்வழிச் செல்வார், ஆண்டாண்டுப் பெறும் உணவுகள் இவை இவை எனக் கூறுமுகத்தான்், கானவர், இடையர், வேடர் முதலாயிைேர் தம் விருந்தோம்பும் பண்புகளே விரித்துணர்த்தியுள்ளார்.

காட்டு மக்கள் கொடியராவர் என்றே எவரும் எண்ணி யிருப்பர்; ஆனால், நம் புலவர் கூறுகிருர்: அவர் அத்தன் மையரல்லர் அவர்கள் அவ் வழிவரும் புதியராயினுர்க்கு "இடையூறு ஒன்றும் விளக்காது, அவர்கள் அவ்விடங்களே இனிதே கழிய இனிய துணேவராவர் என்றும், "கானவர் இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் அடுக்கல்," (17-19), வழிச்செல்வார் கானவர்தம் சிறுகுடியில் தங்கின், தேனும், கிழங்கும், தெவிட்டா ஊனும் உடன் வருவரெல்லாம் அருந்தப்பெறுவர் என்றும், தேனினர், கிழங்கினர், ஊஞர் வட்டியர்.கானவர் செழும்பல்