பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. இருந்தையூர்க் கொற்றன் புலவனுர்

இருந்தையூர், இடைச்சங்க காலத்திலிருந்தே புலவர் பெருமக்களின் வாழ்விடமாக விளங்கி வந்துளது ; கருங்: கோழி மோசியார் என்ற புலவர், இடைச்சங்க காலத்தே ஆண்டு வாழ்ந்திருந்தார் எனச் சிலப்பதிகார உரையால் உணர்கின்ருேம். தென்னுர்க்காடு மாவட்டம் திருக்கோவ: லூரை யடுத்து, இருந்தை என்ருேர் ஊர் உளது; இவ் விருந்தையூர், அதுவாக இருத்தல்கூடும் என்பர் சிலர் : இனி, கொற்றன் புலவர்ை பாடிய பாட்டின் இறுதி, "இருந்த ஊர்” என முடிகிறது : அச்சொல்லையே அவர் பெயர்முன் இட்டு வழங்கினரோ எனவும் சிலர் எண்ணுவர். மகளிர், மலேப்பாறைகளில் தினயைப் பரப்பிக் காத்துக் கிடக்க, அத்தினேயுண்ண விரும்பும் மந்தி அது மாட்டாமையால் வருந்தி இருந்து, அம்மகளிர், காவலேச் சிறிது மறந்து சுனே ஆடலேக் கண்டு, தன் குட்டிகளோடும் விரைந்து சென்று வேண்டுமளவுங் கவர்ந்து உண்டு களிக் கும் அழகிய காட்சியை நன்கு காட்டினர் புலவர் :

'கிரைவளை முன்கை கேரிழை மகளிர்

இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச் சுனேபாய் சோர்விடை கோக்கிச் சினையிழிந்து, பைங்கண் மக்தி பார்ப்பொடு கவரும்.” (குறுங்: டடு) வரையாது வந்தொழுகும் தலைமகன்பால், தலைமகள் இற்செறிக்கப்பட்டாள்; அவள் விடு, மலைகளின் இடையே இருப்பது ; ஆகவே, அடைதற்கருமையுடையது. மேலும் அவள் அண்ணன்மார் வன்கண்ணராவர்; ஏதம் உண்டாம். ஆகவே, வரைந்து கொள்வாயாக எனத் தோழி கூறுவா ளாகப் பாடியுள்ளார். புலவர். -

"வெற்பிடை கண்ணி யதுவே: வார்கோல்

வல்வில் கானவர் தங்கைப் - பெருந்தோள் கொடிச்சி இருந்த ஊரே." . - . . . .

- (குறுங்:உகதிர்