பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

சோழர்களுள் ஒரு சாராரின் தலைநகராக விளங்கிய உறையூர், 'அறம் துஞ்சு உறக்தை என்ற புகழுடைமை யோடு, புலவர் பலரின் வாழ்விடமாம் புகழும் உடையது ; ஏணிச்சேரி முடமோசியாரேயன்றி, இளம் பொன்வணி கனர், கதுவாய்ச் சாத்தன், சல்லியன் குமரன், சிறுகந்தன், பல்காயன், மருத்துவன் தாமோதரன், முடவன், முது' கண்ணன் சாத்தன், முதுகூத்தன், முதுகொற்றன் போன்ற பத்துப் பெரும்புலவர்கள் பிறந்து வாழ்ந்துள்ளனர் அவ்' வுறையூரில். இவ்வாறு புலவராற் பொலிவுற்ற பேரூரில், அவ்வூரின் ஒரு பகுதியாகிய ஏணிச்சேரியில் பிறந்தவராவர்; இவர் பெயர் மோசியார், மோசி என்றே வழங்கப்பெறும்; இவர் பெயர்க்கு முன்வரும் முடம் இவர் உறுப்புநலம் உணர்த்த வந்ததுபோலும். இவர் அந்தணர் ; இது, 'ஊரும், பெயரும்” என்ற தொல்காப்பியம் மரபியற். சூத்திரத்திற்குப் (74) பேராசிரியர் எழுதிய உரைக்கண், 'உறையூர் ஏணிச்சேரி முடமோசி..அந்தணர்க்குரியன்' என எழுதியிருப்பதால் உணரலாகும். முடமோசியார், புலவர் பாராட்டும் புலமை வாய்ந்தவராவர் இவராற் பாடப்பெறுதல் அரசர்க்குப் பெரும்புகழாம் : குமணனைப் பாடிய புலவர் பெருஞ்சித்திரளுர், தாம் பாடிய அப் பாட்டில் ஆயின் பெருமையினேப் பாராட்டுங்கால், அவன் மோசியால் பாடப்பெற்றவன் என்று கூறியதோடு, இவரைத் "திருந்துமொழி மோசி” என்றும் கூறிச் சிறப் பித்தார். எனின், மோசியாரின் பெருமையினேப் பகருதற். கியலுமோ? . , , " . . . . . . ' ' '... . . .'

ஏணிச்சேரி முடமோசியார், சோழன் முடித்தலேக், கோப்பெருநற்கிள்ளி என்ற சோழவேந்தன்பால் அன்பும், சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன்பால் நட்பும் உடையவராவர். முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி, அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு பகைகொண்டு, அவன் கருவூரை முற்றியிருந்தான்் ; ஒரு