பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 65

யின வியந்து பாராட்ட, ஆய், தனக்கு நாகம் கல்கிய கல்லாடை ஒன்றை ஆலமர் நீலகண்டனுக்கு அளித்து மகிழ்ந்தான்் என்ற ஒரு கதையினே அக்கால மக்கள் கட்டி விட்டிருந்தனர். t -

ஆயைப் பாடிய புலவர் அனேவரும் அவன் கொடைசி சிறப்பினேயே பாடிப் பாராட்டியுள்ளனர். ஆய், தன்சீனப் பாடிவரும் பாணர், பொருநர், புலவர் முதலாயினர்க்கு யானே பல அளித்து மகிழும் இயல்புடிையன்; அவன அளிக்கும் யானேப் பரிசிலைக்கண்ட புலவர் முடமோசியார், "ஆய்! நீ பாடிவருநர்க்குப் பரிசாக அளிக்கும் யானேகள் எண்ணில் அடங்கா; இவ்வாறு வருவார்க்கெல்லாம் யானே களேயே அளிக்கவல்லமைாறு, கின்நாட்டுப் பெண்யானைகள் ஒருமுறை கருவுற்றவழிப் பத்துக்கன்றுகளைப் பெற்றெடுக்

po» -

குமோ?” என்றும்,

'விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! கின்ட்ைடு -

இளம்பிடி ஒருசூல் பத்தி னும்மோ?" (புறம்: கட0) யானேகள் கிறைந்துள்ள காடொன்றைக் கண்டு, இக்காடு இவ்வாறு யானைகளே மிகப்பலவாகக் கொண்டுவிளங்க, ஆயைப் பாடிப் பரிசில்பெறும் இரவலரைப்போன்று, இக் கர்டும் அவனேப் பாடி யாசீனப் பரிசில் பெற்றுளதுபோலும் !" என்றும், -

"அண்டிரன்

குன்றம் பாடின கொல்லோ? - களிறுமிக வுடைய இக்கவின்பெறு காடே."

(புறம் : க.க) ஆய், பரிசாக அளித்த யானேகளின் எண்ணிக்கையோடு வானத்துமீனின் எண்ணற்ருெகையினே ஒருங்குவைத்துக் காணல் இயலாது. வானத்துமீனினும் அவன் அளித்த யானைகள் அதிகமாம்; விண்மீன்கள் வானத்தின் இடை யிடையே வெற்றிடம் தோன்ற விளங்குவதைப்போலன்றி, வானிடமெல்லாம் வெண்ணிறமே தோன்றுமாறு, வான் முழுதும் தோன்றின், அக்கால் அவற்றின் எண்ணிக்கை