பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனுர்

இவர் உறையூரிற் பிறந்தவர்; சாத்தனர் எனும் பெயர் உடையார். இவர் பெயர்க்கு முன்வரும் கதுவாய் என்ற சொல் முரிந்த வாய் எனப் பொருள்படும்; அச்சொல் இவர் பெயர்க்குமுன் ஏன் வழங்கப்பெறுகிறது என்பதை, அறிந்து கூறுதற்கு இயலவில்லை. இவர் பாடிய பாட் டொன்று கற்றிணைக்கண் வந்துளது. -

மக்கட் பிறப்பால் அக்குடி விளங்கும், வளரும் என்று கூறுகிருர் ஒரு பெண் மகவு ஈனும் காலத்தே அவள் சுற்றத்தாரெல்லாம் ஆண்டுக் கூடியிருப்பர் அவளுக்கும். அவள் ஈன்ற மகவிற்கும் தீங்குண்டாகாவண்ணம் வெண் சிறுகடுகை வீடுமுற்றும் பூசிவைப்பர் என்றும் அவர் அறிவித்துள்ளார்; மகவின்று மாண்புற்றுக் கிடப்பாளே, அவள் கிடக்கும் பாயல் அருகே சென்று, "மகவின்ற மாண்பில்ை, மங்கை, மடந்தைபோலும் பெயர்கள் மறைய அரிவை தெரிவைபோலும் புதுப்பெயர் பெற்றன ;. அதுவேயுமன்றி மூதறிவுற்ற முதுபெரும் பெண்டாம் பெருகில்ேயும் உற்றன" என்று கணவன் பாராட்ட, அவன் பாராட்டுரை கேட்டு உள்ளம் மகிழ்ந்த அவள் சிறிதே. முறுவல் தோன்ற அவனேப் பார்த்து, காணத்தால் மேலும் காணமாட்டாளாய்க் கைகளால் கண்புதைப்பாள் அவள் எனப் புலவர் கூறுவது, கணவன் மனேவியின் களிப்புமிகு வாழ்க்கையினே விளங்கத் துணைபுரிதல் காண்க, *

கேரிழை. கடும்புஉடைக் கடுஞ்சூல் கம்குடிக்கு உதவி

கெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காம் விளங்குக்கர் விளங்கக் கிடக்தோள் குறுகிப் புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து....... * - முதுபெண் டாகித் துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஒதிஎன

முகைநாண் முறுவல் தோற்றித் தகைமலர் உண்கண் புதைத்துவக் ததுவே." -

- - - (நற் : கடவ0)

همهب-مسجسسجم مصبع معهميسمهمة