பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக, உறையூர்ச் சிறு கந்தனுர்

கந்தன் என்ற கடவுள் பெயரைத் தம்முடைய இயற்.

-டெய்ராகக் கொண்டிருந்த இவர், அவ் வுறையூரில் பெருங்:

கந்தனர் என்பாரும் இருந்தமையால் சிறு கந்தனர் என அழைக்கப் பெற்றுளார். • ,

நீரின் தண்மையும், தீயின் வெம்மையும், அவற்றைத். இண்டியவழி உறுத்தும்; அவற்றை விட்டவழி அகலும்; ஆனால் காமநோய், காதலர் உற்றவழித் தோன்றி, அவர் அற்றவழி அகலாது அவர் அற்ற காலத்தில், அவர் உற்ற காலத்தினும் உறுதுயர் தரும் இயல்பிற்ரும்: இக்கருத்தை விளக்கும் பழம் பாட்டொன்று உண்டு: - -

ரிேன் தண்மையும், தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து, தீரத் திரும், சாரல் நாடன் கேண்ம்ை. சாரச் சாரச் சார்ந்து, திரத் திரத் திர்பொல் லாதே." காதல் நோயின் இவ் வியல்பினே, ஒரு பெண் தன் தோழிபால், 'நம் தலைவன் வருந்தோறும் வெளிப்பட்டுத் தோன்றும் காமப்பகை, அவர் அகன்றவழி, அவரோடு அகலுவது செய்யாது பெருந்துயர் தாரா கின்றது; இதற்கு என் செய்வேன்?” எனக் கூறினுளாகப் பாடி விளக்கியுள்ளார் புலவர் கந்தனுர்:

"ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் ,

அகவினும் அகலா தாகி. . . . இகலும் தோழி கம் காமத்துப் பகையே." . . . . ‘. . . . . . . ; - - (குறுங் : உடுள)