பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. உறையூர் முதுகொற்றனுர்

உறையூர்வாழ் புலவர்களுள் இவரும் ஒருவர் : இவர் பாடிய பாடல்கள் இரண்டு குறுந்தொகைக்கண் இடம் பெற்றுள்ளன. ஒரு தலைவன், தான்் மணக்க விரும்பிய, தன்பால் நிறையன்புடையாள் ஒரு பெண்ணே, அவள் பெற்ருேர் தனக்கு மணஞ்செய்து தர மறுத்தல் அறிந்து, அவளே அவர் அறியாவண்ணம் தன்னுார்க்கு அழைத்துச் செல்கின்றன் ; இடைவழியில் அவர்களேச் சிலர் கண்டனர்; பெண்யானேபோன்ற பேரழகு நிறைந்த அப் பெண்ணே யும், அவளுக்குச் சிறிதும் துயர் உருவண்ணம் துணை புரிந்து செல்லும் அவன் அன்பையும் கண்ட அவர்கள், அவ் விருவரும் இனிதுவாழ விரும்பினர்; அவர்களைக் கண்ட காலம், பொழுது மறையும் அந்திக் க்ாலம் என்ப தையும், அவர்கள் செல்லும்வழி ஆறலைகள்வர் தொல்லே கிறைந்த கெடுவழியாம் என்பதையும் அறிந்து, அத்தகைய கொடுவழியில் அவர்கள் அப்போது மேலும் செல்லுதல் செவ்விதன்று என எண்ணினர்; உடனே அவருட் பெரிய ராயினர் சிலர், அவ் வாண்மகனே அடுத்து, "அன்ப ! பொழுதும் போய்விட்டது; வழியும் கொடுமை கிறைக் தது; வணிகர்களே அலைத்து அவர் பொருளேக் கொள்ளேக் கொள்ளக் கருதிய ஆறலேகள்வர்கள், அவர்களே அலேத்தற் காம் இடம் நோக்கிப் பின் தொடர்ந்து வந்து, அவ் வணி கர்கள் எம் சிற்றுாரில் தங்கிவிட்டாராதல் அறிந்து வறிதே திரும்புங்கால் எழுப்பிய அவர் பறையொலியும் அதோ கேட்கிறது ; ஆகவே அவர்கள் அண்மையிலேயே உள்ள னர் என்பதையும் உணர்வாயாக இவ்வாறு கொடுமை கிறைந்த வழியில் மேலும் செல்லாது இன்று இரவு இங்குத் தங்கிச் செல்வாயாக." என்று கூறினர் எனப் பாடி, அக் கால இளைஞர்களின் அன்பு உள்ளத்தையும், ஆன்ருேச் களின் அருள் உள்ளத்தையும், அன்பும், அருளும் கிறைக் தார் இடையே வாழும், ஆறலேகள்வர்போலும் அறவுள்ளம் இல்லார்தம் மறவுள்ளத்தையும் உணரத் துணைபுரிந்துள்

புலவர். -