பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் முதுகொற்றனர் 8s

"எல்லும் எல்லின்று பாடும் கேளாய்:

செல்லா திமோ, சிறுபிடிதுணேயே! . வேற்றுமுனை வெம்மையின் சாத்துவந்து இறுத்தென வளையணி நெடுவேல் ஏந்தி . . . . . . . . மிளைவந்து பெயரும் தன்னுமைக் குரலே."

(குறுங் : க.க)

ஆயர், நல்லினத்தாய்ர், புல்லினத்தாயர், கோட்டினத் தாயர் என மூவகைப்படுவர்; கல்லினம் பசுக்கள்; புல்லி னம் ஆடுகள்; கோட்டினம் எருமைகள். புல்லினத்தாயர், தம் ஆடுகளே ஒட்டிச் செல்வராயின், பலநாள் வீடு திரும் பார். அவற்றைத் தாம் மேய்க்கும் இடங்களிலேயே வைத் திருப்பதால், அவற்றினின்றும் பெற்ற பாலேமட்டும், காள் தோறும் ஒருவன் நாட்டுக் கொண்டு சென்று விற்றுத் தமக்கு வேண்டும் உண்வுப்பொருள்களேப் பெற்றுச் செல்வன் அப் பாலேத் தம் வீட்டிற்குக் கொண்டுசென்று கொடுத்துவிட்டு, ஆங்கே தமக்கு வேண்டும் உணவைக் கொண்டுசெல்வதும் உண்டு. இவ்விரு வழக்கமும் ஒருங்கே தோன்ற உணர்த்திய ஒரு தொடர் அவர் பாடிய குறுக் தொகைக்கண் வந்துளது. . .

பாலொடு வந்து கூழொடு பெயரும்

ஆடுடை இடை மகன்." (குறுக் உ