பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணனர் 17

வாணிகம் கருதி வெளிநாடுuேர்ம் பொருள்களுக்கும் வெளிநாட்டினின்றும் போதரும் பொருள்களுக்கும் கடற். அறையிடத்தே சுங்கம் கொள்வதோடு, உப்பு முதலாம் பொருள்களே உள்நாட்டிற் கொண்டு விற்போரிடத்தும் சுங்கம் கொள்வது உண்டு. உமணர் முதலாம் உள்நாட்டு வணிகர்கள் தம் பொருள்களேப் பண்டிகளிலும், கழுதைகள் மீதும் கொண்டு செல்லுங்கால், இடைவழியில் அவர்க்கு இடையூறு நேராவண்ணம் கின்று காக்கும் வில்வீரர் வாழ் சிற்றாண் பலவற்றை ஆங்காங்கே அமைத்து, அவ்விடங் களிலேயே, அவ்வழி வருவாரிடத்தே அவர் பொருட்காம் சுங்கம் கொள்வதையும் அக்கால அரசர்கள் மேற்கொண் டிருந்தனர் எனக் கூறுவர் புலவர் :

"மிரியல். புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் கோன்புறத்து

அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழிக் கவலே காக்கும் வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவு.”

(பெரும்பாண்: எக-அடி) ஒரு நாடு, இவ்வாறு செல்வத்தால் சிறந்து விளங்க வேண்டுமாயின், அந்நாடு குறையாத நீர்வளத்தால் கிறை 'வுற்றுத் திகழ்தல் வேண்டும்; நீர்வள்ம், நாட்டில் மழை பெய்வதாலேயே உண்டாம் ஆனால், அம்மழை என்றும் கிடைத்தல் இன்று அது பெய்யாதே பொய்த்துப் போவதும், வேண்டுங்காலத்துப் பெய்யாது, வேண்டாக் காலத்துப் பெய்வதும், வேண்டும் அளவிற்கு மேலும் பெய்வதும் உண்டு. இதல்ை ர்ேவளம் குன்றும் : இக் குறைபாடு உண்டாகாமை வேண்டின், அந்நாடு நீர் அரும் பேராறுகளேப் பெறுதல் வேண்டும் பேராறுகள் நீரருது ஓடவேண்டின், அவ்வாறுகள் பெரிய மலையிடங்களேத் தாம் தோன்றும் இடங்களாகப் பெறுதல் வேண்டும் : அவ்வாறு பெற்ற ஆறுகள் நீர் அரு ; அத்தகைய ஆறுகளே த.உடைய நாடுகள் ர்ேவளங் குன்ரு நீர்வளம் குன்ருமையால் நாடு வளம்பெறும். இவ்வுண்மைகளே உணர்ந்தவர் புலவர். காவிரியாறு, சோழநாட்டை வளர்க்கும் தாய்: அக்காவிரி

աa, ւլ.-II-2 - . .