பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க9. கருவூர்க் கோசுனுர்

வடநாட்டினின்றும், தமிழ்ார்டு புகுந்து வாழ்ந்த பல் வேறு இனமக்களுள் கோசர் என்பாரும் ஓரினத்தவராவர். தொடக்கத்தில் துளுவநாட்டிலும், கொங்கு மண்டலத் திலும் வந்து வாழ்ந்த இவர்கள், பின்னர்த் தமிழக்ம் முற்றும் பரவி வாழலாயினர் : இவர்கள் விரத்திற் சிறந் தவர் ; வாய்மையில் வழுவாதவர் கெட்டகாலத்தும் விட்டு ங்ேகாது கட்டுத் துனே புரியும் நயமுடையவராவர். இவர்கள் தமிழகத்தில் பயில வாழ்ந்துவிட்டமையால், இவர்களுள் .பலர் தமிழில் பெரும்புலவராய்த் திகழவுமாயினர்; செல் லூர்க் கோசங்கண்ணனுர், கருவூர்க்கோசர்ை என்பார் அவருட் சிறந்தாராவர்; கருவூர்க்கோசனர், கருவூரில் வந்து. வாழ்ந்த கோசர்வழி வந்த புலவராவர். -

கருவூர்க்கோசனர், வடகாடு வளம் குறைந்த காலத்தே பொருள் தேடித் தமிழகம் புக்க குடிவழி வந்தவராதலின் பொருளின் அருமையினே உணர்ந்தவராவர்; பொருள் பெற்றவரே புகழ்பெறுதல் இயலும்; பொருள் பெற்றவரே இன்பம் துய்த்தல் இயலும் பொருள் பெற்றவரே ஈகை :புரிந்து அறஞ்செய்தலும் ஆகும்; ஆனால் அப்பொருள் அரிதின் முயன்று தேடுவார்க்கே அடைதல் இயலும், திரைகடல் ஒடித் தேடார்க்குத் திரவியம் சேராது; அது சேர்ாது எனின், அவை மூன்றும் கிட்டா என்று. தர்ம் கிட்ணர்ந்த அறிவினை உலகறியக் கூறியுள்ளார்.அவர்

'இசையும். இன்பமும், ஈதலும் மூன்றும்

அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்மென வினவயின் பிரிந்த வேறுபடு கொள்கை.

(கம் : உச).