பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனுர்" நான்கு தெருக்கள் கூடும் பெரும் சதுக்கங்களில் பூதங்கட்குக் கோயில் எடுத்து வழிபடுவதைப் பண்டைத். தமிழகத்துப் பேரூர் மக்கள் மரபாகக் கொண்டிருந் தனர்; அவ்வாறே, கருவூரிலும் ஒரு பூதம் இருந்தது : இதைச் 'சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன்.' (சிலம்பு : 28 : 147-8) என்ற சிலப்பதிகார அடிகளால் உணர்க. இச்சதுக்கப் பூதத்தின் பெயரைத் தம் இயற்பெயராகக் கொண்டவர் நம் புலவர்.

இவர், தம் மக்கள் மாண்பிலராயினர் என்ற மன வெறுப்பால் மாண்டுபோக எண்ணிய மன்னன் கோப் பெருஞ் சோழன், உறையூர் அருகே ஒடும் காவிரி ஆற்றின் இடைப்பட்ட கிலத்தே ஒரு மரத்தின் அடியில், வடக் கிருத்து உண்ணுது கோற்று உயிாவிடும் காட்சியினையும், அவைேடு, அவன் உயிர் நண்பராகிய புலவர் பலரும் வடக் கிருந்து உயிர்விடும் காட்சியினேயும் கண்டு, அப்பேறு: தமக்கு வாய்க்காமையால் வருந்திப் பாடியுள்ளார். -

'உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்

முழுஉ வள்ளுரம் உணக்கும் மள்ள ! புலவுதிமாதோ ேேய பலரால் அத்தையின் குறியிருக் கோரே. • . . . .

தம் உயிரைத் தாமே விட எண்ணுதல் எளிய செயல்: அன்று அதனினும் அவ்வுயிர் தம் உடல் சிறிது சிறிது அழியப் போக எண்ணுதல் அரிதினும் அரிதாம்; ஆதலின், கோப்பெருஞ்சோழன், வடக்கிருந்து உண்ணு நோன்பு மேற்கொண்டு, மழை, வெயில், பனி, காற்று. இவற்றிற்கு. •. அஞ்சாது. அவற்ருல் உடல் அழிய உயிர்விடத் துணிக் துளானதலின், அவனே வீரன் எனப் பொருள்படும் மள்ள” என்ற சொல்லால் விளித்துளார் நம் புலவர்.

menia: :