பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. கல்லாடனுர்

கல்லாடர் என்ற பெயருடையார் ஒருவரல்லர் ; பல ராவர்: நாம் அறிந்துவரும் சங்கப்புலவர் வரிசையுள் வைத்து மதிக்கப்பெறும் கல்லாடர் ஒருவர் ; பதினென் ரும் திருமுறை நூல்களுள் ஒன்ருய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் இயற்றிய கல்லாடர் மற்றொருவர் ; தொல் காப்பியம் சொல்லதிகாரத்துக்கு உரைகண்ட கல்லாடர் வேறு ஒருவர் ; கல்லாடம் கற்ருைெடு சொல்லாடாதே என்ற பெருமையினே உடைய கல்லாடம் என்ற நூலாசிரிய டரான கல்லாடர் மற்றும் ஒருவர். ஆகக் கல்லாடர் நால்வ . Ա ի հxfir,

கல்லர்டர், கல்லாடம் என்ற ஊரில் பிறந்தவராவர்; இக்கல்லாடம், 'கல்லாடத்துக் கலந்தினிதருளி, நல்லா ளோடு கயப்புற எய்தியும்" என மணிவாசகப் பெருந்தகை யாரால் பாராட்டப்பெறும் மாண்புடையதாகும் ; கல்லா உர்ை தொண்டைநாட்டைச் சேர்ந்தவராதலின், அவர் பிறந்த கல்லாடம், தொண்டைநாட்டைச் சேர்ந்ததே என்பதில் ஐயமில்லை ; கல்லாடிச்சுரம்" என்ற பெயரால் ஒரு சிவன் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில், சென்னைக்கு வடக்கே பொன்னேரிக்கு அருகே உள்ள .புகைவண்டி நிலையமாகிய மீஞ்சூரில் உளது; திண்டிச்சுரம், சுங்கமீச்சுரம், ஆலிச்சுரம் என்ற பெயருடைய கோயில் களைக் கொண்ட ஊர்கள் முறையே திண்டிவனம், சங்கம் ஆற்பாக்கம் என அழைக்கப்பெறுதலேபோல், கல்லா .டீச்சுரம்" உள்ள், மீஞ்சூர் பண்டைக்காலத்தில் கல்லாடம் என வழங்கியதாதல்வேண்டும். ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழ்ல்கோட்டத்து ஞாயிறுகாட்டு மீஞ்கு ருடையார் கல்லாடிச்சுர முட்ையார்.' (A. R, No. 133 of 1916) என்ற கல்வெட்டினே நோக்க, பழங்காலத்தே கல்லாடம் என் வழங்கிய அவ்வூர்ப் பெயர், அக்கல்வெட்டுக் காலத்தே அவ்வூர்க்கேர்யில் அளவோடு நின்றுவிட்டது என அறிகிருேம் என ஆராய்ந்து கூறுவர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்கள்,