பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. கள்ளில் ஆத்திரையனுர்

கள்ளில் என்பது தொண்டைனாட்டில் உள்ளதோர் :ஊர் : இக்கள்ளில், 'தொண்டை காட்டுப் புழற்க்ோட்டத் துக் குன்றிகை காட்டுத் திருக்கள்ளில்" (A. R. 486 of 1926) எனக் கல்வெட்டுக்களுள் வழங்கப்பெறும் கள்ளில் இருந்த குன்றிகைகாடு, குன்றகல்லூர் என அவர் பாட்டிலேயே இடமும் பெற்றுளது; அவ்வூரில் உள்ள சிவனேக் 'கள்ளின் மேய அண்ணல்," எனத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். ஆத்திரையன் என்ற இவர் இயற்பெயர், ஆத்திரேயன் என்பதன் மரூஉவடிவாம் : அவர் அந்தனராவர் என்று கூறுவாரும் உளர். இனி, கள்ளுண்பார், கள்ளே உண்ண வேண்டி மேற்கொள்ளும் பயணத்தைக் கள்ளில் கேளிர் ஆத்திரை,” எனக் குறிப்பிட்டமையால் இவர் இப்பெயர் பெற்ருர் என்று கொள்வாரும் உளர்.

ஆத்திசையனர் அருமன், ஆதனுங்கன், கல்லேர் முதிய்ன் ஆகிய தலைவர்களேப் பாடியுள்ளார்; அருமன் என்பர்ன் சிறுகுடி என்னும் ஊரினன் : காக்கைக்ள் இனத் தோடு இருந்து உண்ணுமாறு கடவுட்கு, கருணைக்கிழங் கோடு கூடிய செந்நெல்ாலலாய வெண்சோற்றினேப் பலி தருவன் என இவன் பெருமை பாராட்டுவர் நக்கீசர்; அவன் மூதூர் பழைமை உடையது. பல்வளம் கிறைந்து அழகுடையது என்று கூறுகிருர் கம் புலவர். "ஆதி அருமன்.மூதூர் அன்ன.” -

ஆதனுங்கன் ஒரு குறுகில மன்னன் வேங்கட :மலேயும், அதைச் சூழவுள்ள காடும் இவனுக்கு உரியது: இரவலர் இன்மை தீர்க்கும் இனிய உள்ளம் உடையவன்; .கள்ளில் ஆத்திரையனர் இளேஞராய் இருந்த காலத்தே இவனேச் சென்று கண்டர்ச் அப்போது ஆங்கு வந்த புலவரைப் புலவ! கோடைமுற்றி வற்கிட்ம் உற்ற க்ாலத்தே உறுபொருள் அளித்து உ தற்றதுயர் தீர்ப்பாருள்