பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மாநகர்ப் புலவர்கள்

கண்ணி நார்முடிச் சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலா தனுமாவர். இச் செய்திகள், 'உதியஞசேரற்கு வெளியன்

வேண்மான் கல்லினி ஈன்ற மகன் ... .... இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,' (பதிற்று : பதிகம் : 2), "இமயவரம் வன் தம்பி ... .... பல்யானைச் செல்கெழு குட்டுவன்'

(பதிற்று: பதிகம் : ), ஆராத்திருவின் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்....... களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்" (பதிற்று : பதி கம் : 4), "குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேளாவிக் கோமான் தேவி ஈன்ற மகன்......ஆடுகோட்பாட்டுச் சேர லாதன்' (பதிற்று : பதிகம் : 6), 'குடவர் கோமான் நெடுஞ் சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்....கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்" (பதிற்று, பதிகம் : 5), 'சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்று எழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன் மகள் நற்சோனே ஈன்ற மக்கள் இருவர்' (சிலம்பு : பதிகம் : அடியார்க்கு கல்லார் உரை) என்பனவற்ருல், தெளிவாதல் தெளிக.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமயம்வரை படை யெடுத்துச்சென்று, ஆங்குத் தன்னுடன் பொருத ஆரிய அரசர்களே வென்று வணங்கச்செய்து அவ் வெற். றிக்கு அறிகுறியாக, அவ் விமயமலைமேல் தன் அரச இலாஞ்சனேயாகிய வில்லைப் பொறித்து மீண்டான். தமிழகம் முழுமையும் தன் அரசே கிலவ ஆண்டான் ; சேரலாதனின் இவ் வெற்றிச் சிறப்பு, 'அமைவால் அருவி இமையம் விற்பொறித்து, இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் Alஇத் தகைசால் சிறப்ப்ொடு பேரிசை மரபின் ஆரியர் வணக்கி" (பதிற்று : பதிகம் : 2), 'கும்ரியொடு வடஇமயத் தொருமொழி வைத்து உல காண்ட சேரலாதன்' (சிலப். வாழ்த்து உரைப்பாட்டு மடை), வடவர் உட்கும் வான்தோய் கல்லிசைக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்" (பதிற்று : பதிகம் : 5). என்ற தொடர்களால் விளங்க உரைக்கப்பட்டிருத்தல் உணர்க. சேரலாதனின் இவ் வெற்றிச் சிறப்பினே அவனைப்