பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மாநகர்ப் புலவர்கள்

வதைவிட்டுத் தான்ே நேரில் அறிந்து அகற்றி, அவர் அகம் மகிழ ஆளுதலே அரசன் அறநெறியாக் கொள்ளுதல் வேண்டும் என்று கூறி முடித்தார்:

'வருபடை தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப்

பொருபடை தரூஉம் கொற்றமும், உழுபடை ஊன்று.சால் மருங்கின் ஈன்றதன் பயனே :

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடுபுறங் தருகர் பாரம் ஒம்பிக் குடிபுறம் தருகுவை யாயின், கின் அடிபுறம் தருகுவர் அடங்கா தோரே...'

. (புறம் : கூடு) புலவர் கூறியன கேட்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அவர் கிலத்திற்காம் பழங்கடனேயே யன்றி நாட்டு கிலத்திற்காம் பழங்கடன்களேயெல்லாம் விடுதலை செய்து, புலவர் விரும்புவன பிறவும் அளித்து அனுப் பினன். என்னே புலவர்தம் பெருந்தொண்டு!

இவ்வாறு வேந்தர்க்கும் அறிவுரை கூறவல்ல வெள்ளேக் குடி நாகனர், புலவரும் போற்றும் புலமை நலம் பெற்றவ சாவர். தலைவன் தன்பால் கொண்ட அன்பின் மிகுதியால் கிறையிருட் காலத்தே, தன் வீடு நோக்கி வரும் வழியின் கொடுமைகண்டு அஞ்சிய தலைமகள், "தோழி! அவர் வரும் வழியின் இருள் நிறைந்து, கொடுமை மிகுந்திருப்பதை யான் சென்று கண்டிலேன் ஆயினும், அவர் வரும்வழி, என் முன்வந்து நிற்பது போலவும், கல் நிறைந்து கொடுமை மிக்க அவ்வழியில் நடந்து என் கால்கள் நோவதைப் போன்றும், அவர் வரும் வழியில் கிலவும் இருள் என் கண்முன் தோன்றுவது போன்றும், அவ்விருளின் கொடுமையினக் கண்டு என் கண்கள் வருந்துவதைப் போன்றும் உளது; யான் என் செய்வேன்," என்று தன் உள்ளத்துவரை உணர்த்தினுள் எனப் பாடிய

தின நுகருங்கள்: