பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு). வேம்பற்றுார்க் ஆமானுர்

சோழநாட்டில், தஞ்சை மாவட்டத்தில், திருமங்கலக் குடிக்கருகே ஒரு வேம்பற்றுார் உளது எனினும், குமரனர் பிறந்த வேம்பற்றுார், வேம்பற்றுார்க் கண்ணன் கூத்தனர் போன்ற சங்கப் புலவர்களின் பிறப்பிடமாய் விளங்கும் பாண்டியநாட்டு வேம்பற்றுாரே என்று அறிஞர்கள் கருதுவர். வேம்பற்றுாரில் பிறந்த புலவர்கள் அனேவரும் அந்தண ராகவே உள்ளனர் ஆதலின், இவரும் அந்தணரே; அவர் பெயரும் அந்தணர் என்பதை உறுதி செய்கிறது என்று கூறுவாரும் உளர். இக் கூற்று எத்துணே உண்மையுடை யது என்பதை எம்மால் துணிந்து கூறல் இயலாது; அறிஞர்களே முடிவு செய்து கொள்வார்களாக. - வேம்பற்றுார்க் குமரனுர், போர்வீரர் பண்பையும், அவர் ஆற்றும் போரால் பாழான காட்டின் கேட்டையும் கன்கு உணர்ந்தவராவர்; பழந் தமிழ்வீரர், போர் வந்தது என்றதும், அந்தோ! ஆனதோ வெஞ்சமர்' என அலறித் துடிக்கும் உள்ளத்தவரல்லர் போர் எனப் பூரிக்கும் தோளராவர்; போர் வந்தது எனில், தம் ஆண்மையின் ஆற்றலை அறியச் செய்வதற்காம் அரிய வாய்ப்பொன்று வந்தது என ஆரவாரிப்பர். அவ் ஆரவா ரம் அடங்கியபின்னர், "எமமையும் பகைக்கும் படை யாளர் உளரோ?' எனச் சினப்பர். அச் சினத்தால், அவர் கண்கள் சிவப்பேறும்; அத்தகைய ஆண்மையாள ரர்வர் அக்காலப் படைவீரர் என அவர்கள் பண்பினைச் செரு வேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர்," என்ற அழகிய தொடரால், சுருங்கக்கூறி விளங்க வைத்துள்ளார். நாடு செழிக்க நல்லரசு நடைபெறும் நாட்களில், காட்டார் சாவியத்திலும், ஒவியத்திலும் கருத்துடைய ராய்க் கலையுணர்ச்சி மிக்குவாழ்வர்: அக்காலே, அவர்கள் தங்கள் ஒவியப் புலமையினே உலகறியக் காட்டுவதற்காக, அழகிய ஒவியங்களே, ஊர் மன்றம்போலும் பலர் கூடும். இடந்தோறும் அழைத்து, அகம் குளிரக்கண்டு மகிழ்ந்து வாழ்வர். இத்தகைய இன்ப வாழ்விற்குப் போர் உண்பா யின், இடையூறு உண்டாம்; ைேகவர் படையால் பாழ்.