பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.டு. கோட்டம்பலவனுர்

கோட்டம்பலம் என்னும் ஊரினராதலின், இவர் கோட்டம்பலவர்ை என அழைக்கப் பெற்றுளர், சேச காட்டு ஊர்களுள் ஒன்று : இஃது இப்போது அம்பலப் புழை என அழைக்கப்படுகிறது. மாக்கோதை என்ற சேரவேந்தன், இக் கோட்டம்பலத்தே இருந்து உயிர் அதுறந்து, கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை எனப் பெயர் பெற்ருன் எனவும் அறிகிருேம். ஆதலின், இதன் பெருமை ஒருவாறு உணரலாகும். இனி, இவர் பாடிய பாட்டொன்றில், குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்,” என்ற சொற்ருெடர்க்கண் வரும் கொட்டும்' என்ற சொற் சிறப்பான், இவர்க்கு இப் பெயர் உண்டாயிற்று எனக் கூறுவர் சிலர். அஃது அத்துணேப் பொருந்துவ தன்று. பக்கத்தே பல இசை முழங்க, முறுக்குண்ட கயிற்றின்மீது கின்று ஆடிப்பிழைக்கும் கழைக்கூத்தியர் பண்டைக்காலத்தும் இருந்தனர் என்பதை இவர் பாடலால் அறிகிருேம். கழைக்கூத்தியர் கட்டிய கயிற்றின்மீது கின்று குரங்குக்குட்டி ஆடக்கண்ட குறவர்சிருர் கைகொட்டி மகிழ்வர் எனக் கூறும் கூற்று இன்பம் பயந்து நிற்பதாம். ஒருத்திபால் உள்ளத்தைப் பறிகொடுத்தான்ேர் இளைஞன், என் நெஞ்சம் அவள் கைக்குள் அடக்குண்டுளது ; அதை விடுவிக்கும் ஆற்றல் அவளுக்கே உண்டு ; அதைப் பிறர் எவரானும் விடுத்தல் அரிதாம் என்று கூறினன் எனப் பாடியுள்ளமை பாராட்டற்குரியது.

'கழைபா டிரங்கப், பல்லியம் கிறங்க

ஆடுமகள் கடந்த கொடும்புரி கோன்கயிற்று அதவத் தீங்கனி யன்ன செம்முகத் துய்த்தலே மந்தி வன்பறழ் துரங்கக் - கழைக்கண் இடும்பொறை ஏறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்கள் தாள்ம் கொட்டும் கொடிச்சி கையகத் ததுவே, பிறர் விடுத்தம் காகாது பிணித்தஎன் நெஞ்சே.' (கற்:கடு):