பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மாநகர்ப் புலவர்கள்

வாகுக." என்று கூறிள்ை எனவும், பிரிவறியாத் தம் காத லுக்கு ஆணும் பெண்ணுமாய்ப் பிரிவின்றி இணைந்து மலர்களில் பயின்று வாழுங்கால், அம் மலர் இதழ் ஒன்று, அவற்றின் இடையே உற்று நீங்கின், அவ் விதழ் உற்றதால் உண்டாய சிறுபிரிவினைப், பல ஆண்டுப் பிரிவேபோல் கொண்டு வருந்தும் மகன்றில் பறவைகளின் பிரிவறியாப் புணர்ச்சி நிலையினே உவமை கொண்டாள் எனவும் பாடிய புலவர் செய்யுள் நயம் சுவைத்தற் குரியது.

“பூ இடைப் படினும், யாண்டுகழிந் தன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு உடன்உயிர் போகுக தில்ல ; கடன் அறிந்து இருவே மாகிய உலகத்து ஒருவே மாகிய புன்மை நாம் உயற்கே.” (குறுங் : இஎ) பொருளிட்டுதற் பொருட்டுப் பிரிந்துசெல்ல எண் ணும் தலைமகன் ஒருவன், என்றும் பிரிந்தறியாத் தலைமக ளேயும், அவளேப் பிரிந்துசென்று கொணரும் பொருளினே யும் ஒப்பிட்டு நோக்குகின் முன் நோக்கித் தன் நெஞ்சை விளித்து 'நெஞ்சே! தலைவியொடு கூடி இல்லில் இருப்போ மாயின், தலைவியின் கூட்ட இன்பம் பெறலாமே ஒழியப் பொருள் பெறுதல் இயலாது தலைவியைப் பிரிந்து பொரு ரிட்டச் செல்வோமாயின், திரண்ட பொருளைப் பெறலாமே யன்றித் தலைவியொடு கூடி உறைதலால் உளவாம் இன்பத் தைப் பெறுதல் இயலாது ; ஆகவே, இவ் விரண்டினேயும் ஒப்பு நோக்கின், பொருள்வயிற் பிரியினும், பிரிதலின்றித் தலைவியொடு கூடி மகிழினும், நல்லதொரு செயலேப் புரிக் தாயே ஆவாய் ஆயினும், தலைவியைப் பிரிந்து பெறும் பொருளோ, பொய்கையிடத்து, ஒடுகின்ற மீன் செல்லும் நெறியைப்போல், தாம் இருந்த இடமும் தெரியாமல் அழிந்துபோகும் இயல்புடையது . ஆகவே, கடல் சூழ்ந்த இப்பெரிய உலகையே அளக்கும் மரக்காலாகக்கொண்டு எழுமுறை அளக்கப்பெறும் திரண்ட பொருளேப் பெறுவ தாயினும், அப்பொருளை விரும்பேன் : கலேவியின், செவ்வரி பரந்து, அருள் கிறைந்த கண்கள் என் ஆற்றல் அனேத்தை

i.