பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனுர்

தங்கால், பாண்டிகாட்டில், விருதுநகர்க்கும், ரீவில்லி புத்துருக்கும் இடைப்பட்டதொரு பேரூர் , திருமாலின் துற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்று : இப்பொழுது, திருத்தண்கால் என வழங்கப்படுகிறது. "தடம்புனற். கழனித் தங்கால்” என இளங்கோவடிகளால் சிறப்பிக்கப் பெறும் பெருமையுடையது இத்தங்காலே இவ்வூரை, "இராசராசப் பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கரு நீலக்குடி நாட்டுத் திருத்தங்கால்" (A. R. No. 564 of 1922) எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், இவ்வூரிலுள்ள மடமொன்றில், பாரதமும் இராமாயணமும் படிக்க ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சங்க கால்த்தே, இவ்வூர் நல்லிசைச் சான்ருேர் பலரின் பிறப். பிடமாம் பெருமையுற்றிருந்தது என்பது, தங்கால் பொற். கொல்லன் வெண்ணுகர்ை போன்ற புலவர்களால் புலம்ை. செங்கண்ணனர், ஆத்திரேய கோத்திரத்துப் பிறந்த அந்தணராவர். இவர் பாடிய பாட்டொன்று நற்றிணைக் கண் இடம் பெற்றுளது.

பழந்தமிழ் மக்கள், தாம் உரைத்த உரை பொய்யாது : உரைத்ததை உரைத்தவாறே முடித்துத் தருவேம் என்பதை அறிவிக்குங்கால், குளுறுதல் உண்டாம் ; அக்குளுறவு தப்பின், அவர்க்கு ஏதம் உண்டாம்; ஆனால், அறிவானும் அருங்குணங்களாலும் நிறைந்த பெரியோர் பேச்சு ஒன்றே, போதும் அவர் குளுறுதல் வேண்டுவதின்று என அக் கால மக்கள் கருதினர். இந்த உண்மைகளைத் தம்முடைய பாட்டொன்றில் ஒரிரு அடிகளால் அறிவித்துள்ளார் நம் புலவர்:. . . . . . . . •.

“............... காடன்

அணங்குடை அருஞ்குள் தருகுவன் என : நூம்மோர் அன்னேரி துன்னர் இவை என..' (நற்:கூஅசு):

ہ-تبتہـ ممسنمبہمنینarrد*