பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. நல்லூர்ச் சிறுமேதாவியார்

கல்லூர் என்ற பெயருடைய ஊர்கள் தமிழகத்தில் பல உள; கல்லூர், கல்லூர்ப் பெருமணம், பக்தனே கல்லூர், முதலாய தேவாரம் பெற்ற ஊர்ப் பெயர்களேக் காண்க. பேகன் பரத்தையோடிருந்த ஊர்ப் பெயரும் நல்லுரே, இவற்றுள் புலவர் பிறந்த கல்லூர் எதுவோ அறிகிலம். தாம் பிறந்த கல்லூரைப், 'புன்புல வைப்பின் எம் சிறு கல்லூசே' எனத் தம் பாட்டிடைவைத்துப் பாராட்டி புள்ளார். இவர் பெயர், கன்பலூர்ச் சிறு மேதாவியார் எனவும் சில ஏடுகளில் காணப்படும். அகத்தில் இரண்டும், கற்றிணையில் ஒன்றும் ஆக மூன்று பாக்கள் இவர் பாடி யனவாகக் கிடைத்துள்ளன.

முல்லேகிலத்து ஆயர்மகள் ஒருத்தி விருந்தினரை வரவேற்கும் வனப்புமிகு காட்சியினே நன்கு விளக்கியுள் ளார். "ஐய களாவும் பழுத்துப் புளிச்சுவை பெற்றுள் ளன; விளாவும் பழுத்துள்ளன செம்மறியாட்டின் பாலேச் சிவக்கக் காய்ச்சிப்பெற்ற முற்றிய தயிராகிய உலேயில், மாசு போகக் குத்திக்கொள்ளப்பெற்ற வாகரிசியினேயும் பெரு மழை பெய்தமையால் வெளிப் புறப்பட்ட ஈயலேயும் இட்டுச் சமைத்த இனிய புளிச்சோற்றினே, ஆன் நெய் உருகப் பெய்து கின் ஏவலர் முன்னே உண்ணி, யிேர் முள்வேலி அகத்தே அமைந்த பந்தரை முன்னே கொண்ட, செம்மண் பூசிச் சிறக்கச்செய்த சிறிய இல்லினுட் புக்கு, நினக்கு மனேவியாதற்குரிய இவள் விருந்தேற்று அளிக்க, பால் பெய்த உணவினே உண்டு செல்வாயாக,” எனக் கூறும் அவ் வாயர் மகளிரின் அன்புரையினேயும், அவர்தம் உணவு வகைகளேயும், எத்துனே அழகாக விளக்கியுள்ளார் புலவர் கோக்குங்கள் !

'களவும் புளித்தன ; விளவும் பழுகின :

சிறுதலேத் துருவின் பழுப்புறு விளேதயிர் இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து