பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. நெடுங்களத்துப் பரணர்

இவர் பெயர் ஏடுகளில் நெடுங்கழுத்துப் பரணர் என வந்திருத்தல் கருதி, இப்பெயர் இவர்க்கு நீண்ட கழுத்து உண்மையால் வந்த காரணப் பெயராம் எனக் கருதி வந்த்தை மறுத்து, இவர் பெயர் நெடுங்கழுத்துப் பரணர் என்பது அன்று நெடுங்களத்துப் பரணர் என்பதே முதற் கண் நெடுங்கழத்துப் பரணர் எனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்துப் பரணர் எனத் திரிந்து வழங்கலாயிற்று : இவர் திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே காவிரியின் தென் கரையில் உள்ள நெடுங்களம் என்ற ஊரினராவர்; அவ் ஆரில் இவர் பெயரால் வழங்கிய மேடு ஒன்றும் இருந்தது. இவர் பெயர் திரிந்து வழங்குவதைப் போன்றே பரணர் மேடு என்ற பண்டைப் பெயர் பரணிமேடு எனத் திரிந்து வழங்குகிறது என அரிய ஆராய்ச்சி மூலம் அறிந்து முடிவு செய்துள்ளார் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளே அவர்கள். (செந்தமிழ்ச் செல்வி : 23 : 485) . -

வீரன் ஒருவன் விழுப்புண்பெற்று வீழ்ந்துவிட்டாகை, அவன் சிறப்பினேப் பாராட்டுமுகத்தான்், அவன் மனேவி, அப்போர்க்களத்தே கின்று களம்பாடி மகிழும் பாணரை யும் துடியரையும் விளித்து, "வெள்ளிய தூய ஆடையும், கரிய கிற உடலும் உடைய இம்மறவனே மொய்த்து கிற்கும் :புள்ளினங்களே ஒட்டிக் காப்பீராக! யானும் இவன் உடலே உண்ணவரும் குறுநரிகளை, விளரிப் பண்பாடி விரட்டுவல்; வேந்தன் பொருட்டு வெறிதேயும் உயிர்கொடுக்கும் வெங் திறல் உடையவன் இம்மறவன் ; இத்தகையானுக்கு, வேந்தன் தன் மணிமாலையைச் சூட்டிவிட்டு இவன் கழுத் .தில் இருந்த ஒரு காழ் ஆரத்தைத் தான்் அணிந்துகொண்டு சிறப்புச் செய்துள்ளான்; அத்துணைப் பேரன்புடையயை அவ்வேந்தனும், இவனே இழந்தமையால் பெருந்துயர் உறும் என்னேப் போன்றே பெருந்துயர் உறுவானுக"

எனப் புலம்பி கின்ருள் எனப் பாடியுள்ளார்: