பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. பிசிராந்தையார்

பிசிராந்தையார், பாண்டிநாட்டில் பிசிர் என்னும் ஊரில் பிறந்தவர் : பிசிராந்தையாரின் பெறுதற்கரிய கண்ப கிைய கோப்பெருஞ்சோழன், தன் நண்பர், தென்னம் பொருப்பன் கன்னட் டுள்ளும், பிசிரோன் என்ப என் உயிர் ஒம்புகனே,” என்று கூறுதல் காண்க. சோழநாட்டில், புலவர் பலரை நண்பராகக்கொண்டு நாடாண்டிருந்த கோப் பெருஞ் சோழன்பால் அன்புகொண்டு, அவனேக் காணுத முன்பே தன் உயிர் ஒத்த நண்பனுகக் கருதி வாழ்ந்தவர்; கோப்பெருஞ் சோழனும், புலவர் பெருமை யறிந்து, அவரைக் காணுதே, அவர்பால் பேரன்புகொண்டு பெருகட் புடையய்ை விளங்கின்ை. பாண்டிகாட்டில் வாழினும், கோப்பெருஞ் சோழனேயே தம் அரசனுகக் கருதி வாழ்க் தவர்; 'துங் கோ யார்" என வினவியோர்க்கெல்லாம், "எங்கோ, கோழியோனே; கோப்பெரும் சோழன்" என்று கூறிப் பெருமை கொள்பவர்; தம் பெயர் கேட் பார்க்கும் "என் பெயர் பேதைச் சோழன்," என்று அவன் பெயரையே தம் பெயராகக் கூறும் அத்துணை அன்புடைய வர்; கோப்பெருஞ் சோழனும், தன் நண்பன் பிசிராங்தை யாரின் பண்பு கேட்பார் அனேவரிடத்தும், "பிசிராந்தை இகழ்விலன்; இனியன் யாத்த நண்பினன் புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலன்," என்று அவர் பெருமை கூறிப் பாராட்டி வாழ்வன். கேட்டல் மாத்திரையல்லது யாவதும் காண்டல் இல்லா இருவரும் இவ்வாறு உயிர். ஒத்துப் பழகியதாலன்ருே, 'கோப்பெருஞ் சோழனுக்கும், .பி.சிராந்தையார்க்கும்போல உணர்ச்சி யொப்பின், அதுவே, உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினேப் பயக்கும்" குறள் : 785. பரிமேலழகர் உரை). எனச் சிறந்த நண்பர் களுக்கு எடுத்துக்காட்டாக அறிஞர் பெருமக்களால் எடுத் அக்காட்டப் படுவாராயினர்!

இத்துணைச் சிறந்த நண்பர்களாகிய இவ் விருவரும், இவ் வுலகில் ஒருங்குகூடி இருந்து, உயரிய அறவுரைகள்