பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. புல்லாற்றுார் எயிற்றியனுர்

காவிரியின் வடகரைக்கண்ணதாய புல்லாற்றுாரிற்: பிறந்த புலவர் எயிற்றியர்ை, பரிசில் பெற்றுத் தாம். வாழப் பாக்கள் பாடும் பிற புலவர்களேப் போலன்றி, பாக்கள் பாடிப் படையேந்திக் களத்தே கின்ற ஒரு தந்தைக் கும் அவன் மக்களுக்கும் இடையே எழ இருந்த பெரும்: போர் ஒன்றை ஒழித்துப் புகழ்பெற்றவராவர்.

பிசிராந்தையார், பொத்தியார், புல்லாற்றுார் எயிற்றிய ஞர் போன்ற புலவர் பெருமக்களே கண்பர்களாகக். கொண்டு, கொற்றமும் கொடையும் விளங்க விற்றிருந்த, கோப்பெருஞ் சோழனுக்கு மக்கள் இருவர் இருந்தனர்; ஆனால், அவர்கள், "தந்தையரொப்பர் மக்கள்' என்ற. மூதுரையைப் பொய்யாக்கி, மறநெறிமிக்கு மாண்பில ராயினர்; தம் தந்தையோடே பகைத்தனர்; படையெடுத் தும் வந்தனர்; அவர்கள் தம் மக்களேயாயினும், தகா வொழுக்கினராதல் அறிந்த அரசன், தான்ும் அவரை அடக்க அவர்மீது போர்கொண்டு செல்லலாயினன். தந்தை. யும், ம்க்களும் சம்முட் பகைத்துப் போர்புரியும் கொடுஞ் செயல் கண்ட புலவர் புல்லாற்றுார் எயிற்றியனுர், மனம் பொருராய்ப் போரை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த எண்ணினர்.

மக்கள் மாண்பிலராதல் அறிந்த புலவர் அவர்கள்பால் செல்லாது அரசன்பால் சென்று அறவுரை கூறலாயினர். தாம் கூறும் அறவுரைகளே, அரசன் அமைதியுறக் கேட்டல் வேண்டும் என்பதற்காக முதற்கண், அவன் பெற்ற வெற்றி, அவன்பால் அமைந்துகிடக்கும் உள்ள ஊக்கம், உரன், ஆருயிர்கள் மாட்டு அவன்கொள்ளும் அருள் افلاريايي வற்றை எடுத்துக்கூறிப் புகழ்ந்தர்ர். பின்னர், வேந்தே ! கின்னெடு மாறுபட்டுப், பொர வந்துகிற்கும் இவரையும், கின்னேயும் நோக்கின் அவர், கின்குலத்தோடு தொன்று தொட்டு வந்த பகைமையுடையராய சேர, பாண்டியர் குடி