பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள. மாமலாடனுர்

செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலங் களுள் ஒன்று மலாடு ; அது மலைநாடு என்ற சொல்லின் திரிபாம். அப் பன்னிரண்டு நிலங்களே, தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அதன் வடக்கு-நன்ருய-சித, மலாடு, புனல்நாடு செந்தமிழ் சேர்-ஏதமில் பன்னிருநாட் டெண் என்ற வெண்பா வான் உணர்க. அந்நாட்டிற் பிறந்து பெருமையுற்றமை யால் இவர் மாமலாடனர் என மதிக்கப்பெற்ருர். இவர் பெயர் சில ஏடுகளில் மாமிலாடன் எனவும் காணப்படும். இவர் இயற்பெயர் தெரிந்திலது. இவர் பாடிய பாட் டொன்று குறுக்தொகைக்கண் இடம்பெற்றுளது.

பிரிந்து தனித்து இருந்தாரைத் துன்புறுத்தும் இம் மாலையும், தனிம்ை தரும் துயரும், நம்மைப் பிரிந்து சென்ற தல்வர் உறையும் நாட்டில் இல்லையே எனக் கூறும் தலைவியின் துயர்மிகு உள்ளத்தைத் தெளிவாக உணர்த்தி யுள்ளார் புலவர். - - - விடுகளில் கூடுகட்டி வாழும் குருவிகள், வாடிய ஆம்ப லின் பூப்போலக் குவிந்த சிறகுகளே உடையன; அன்ை முற்றத்தே உலரும் உணவுப் பொருள்களே உண்டு, ஊர்ப் பொதுவிடத்தே குவிந்துகிடக்கும் எருக் குப்பைகளைக் குடைந்து விளையாடி, வீட்டு இறப்புக்களில் கட்டிய கூடு களில் தம் குஞ்சுகளோடு தங்கும் இயல்புடையன எனக் கூறுவது, குருவிகளின் வாழ்க்கைகிலேயினக் குன்ருது அறிந்துளார் என்பதை அறிவித்தல் காண்க: 8’’:*

"ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன. ۱۰ تا

கூம்பிய சிறகர் மனஉறை குரீஇ . முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து எருவின் நுண்தாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் .புன்கண் மாலேயும், புலம்பும் இன்றுகொல் : த்ோழி! அவ்ர்சென்ற் காட்டே."

... ', . (குறுங் : சசு)

      • ****