பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக. முக்கல், ஆசான் நல்வெள்ளையார்

முக்கல் என்பதோரூர் : அது யாண்டுளது என்பது: புலப்ப்டவில்லை. அவ்வூரிற் பிறந்த கல்வெள்ள்ேயார் அந்தணர் குலத்து வந்தவராதலின் ஆசான் என அழைக் கப் பெற்றுளார். -

வரைவிடை வைத்துப் பொருள்கருதிப் பிரிந்துபோய தலைமகன், விரைந்து வந்திலகுதல் ஆறிந்து வருந்திய தலைமகள், என்னே மணந்து மக்களப்பெற்று மகிழ்ந்து வாழுங்கால், அம்மனேயறம் மாற்ருரும் போற்ற மதிக்கப் படுதற்காம். பொருள்தேடிப் போகவேண்டிய அவர், இன் னமும் வரையாது வருத்துகின்றனரே என வருந்திய தல், மகள், அவன் கடமையினே விளங்க உரைக்காது, அவன் காட்டுக் கடற்றுறைகள் சூலுற்றுக் கிடக்கும் தம் பெடை, களேக் கரைக்கண் வளர்ந்துகிடக்கும் கொடிகளுக்கு இடை யிடையே காணப்படும் வெண்மணல்மீது இருக்கச்செய்து விட்டு, கழிநோக்கிச் சென்று நீருள் மூழ்கி மூழ்கித் தம் பெடைக்கும் தமக்கும் வேண்டும் அயிரை மீன்களைத் தேடும் கடற்காக்கைகளே உடையது என்று கூறிக் குறித்த பொருளே விளங்கவைத்துள்ளாள். அவள் கூற்றினேப் பாடிய புலவர், கடற்கரைகளில் பெடைகள் அமரும் அம். மண்ல் திட்டுக்கள், ஆங்கு ரோடவரும் நோன்பு மேற். கொண்ட மகளிர் காம் இருத்தற்காக அக்கொடிகளுக்கு இடையிடையே, அவற்றைச் சிறிது அழித்துச் செய்தமை யால் உண்டாம் எனவும் உரைத்துள்ளார்: -

கடலம் காக்கைச் செவ்வாய்ச் சேவல், படிவ மகளிர் கொடிகொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக் கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு இருஞ்சேற்று அயிரை கேரிய, தெண்கழிப் ஆவுடைக் குட்டம் தழவும் துறைவன்' (ாம் : உஎஉ}