பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூச. முப்பேர் நாகனுர்

முப்பேர் என்பது ஒரூர் : பாண்டிநாட்டில் திருவாடா னேயை அடுத்து முப்பையூர் என்ருேர் ஊர் உளது: இம். முப்பையூரே பழந்தமிழ்க் காலத்து முப்பேரூராம் எனக் கருதுவர் சிலர். இவர் பாடிய பாலேத்தினேப் பாட் டொன்று நற்றிணைக்கண் இடம் பெற்றுளது. அஆl: பிரிவிடை மெலிந்த தலைமகள் கூற்றமைய வந்துளது. o பருவத்தே பயிர்செய்தல் வேண்டும் என்ப; பயிர் செய்யவேண்டிய பருவத்தே பயிர்செய்யத் தவறினர், மீண்டும் பயிர்செய்து வாழ்தல் இயலாது மக்கள் வாழ் காளில் பல்வேறு பருவகிலேகள் உண்டாம் ; அவற்றுள் ஒன்று இளமை அவ்விளமைப் பருவத்திற்கு எனச் சில கடமைகள் உண்டு. அவற்றை அப்பருவத்திலேயே செய்துமுடித்தல் வேண்டும். அப்பருவத்தே அதைச் செய்யாது விட்டார். அவ்விளமைப் பருவம் கழிந்த பின்னர் அதைச் செய்தல் இயலாது; அவ்விளமைப்பருவம் மீண்டும் ஒருகால் வருதல் இல்லே இந்த உணர்வு உலகில் உள்ளார் அனேவ்ர்க்கும் உண்டாயின், உலக ஒழுங்கு தவருது என்பதை உணர்ந்த புலவர் அதை எடுத்துக்கூறி அறிவித்துள்ளார். மேலும், நாளே நடப்பன யாவை என்பதை எவரும் அறியார் நாளேக்கு வருவது துன்பமா? அல்லது இன்பமா? என்பதையோ, இன்று உள்ள இன்ப வாழ்வோ அல்லது துன்ப வாழ்வோ இன்னும் எத்தனே நாள் கிலேக்கும் என்பதையோ எவரும் அறியார், அவ்வறி வின்மையே மக்களுக்கு முயற்சியை உண்டாக்குகிறது; நாள் நடப்பதை அறியும் அறிவு மக்களுக்கு உண்டாகி விடின் உலகம் வளராது; ஆகவே, அவர்க்கு அவ்வறி வின்மை துணைசெய்யறது என்பதையும் புலவர் அறிந்து கூறியுள்ளார்.

"முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார்

வர்ம்நாள் வகையளவு அறிஞரும் இல்ல்" (கம் : கூகச),

ಉr. 4-III-5