பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மாநகர்ப் புலவர்கள்

ஆதலின், அரசர் தம் அமைச்சரை, ஆன்றமைக் த சான் ருேராகக் கொள்ளுதல் வ்ேண்டும்; அரசியலின் அடிப்படை உண்மையாகிய இதை உணர்ந்த புலவர் முரஞ்சியூர் முடி காகராயர், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கேடின்றி வாழவேண்டி, “அரசே! கின் அமைச்சர் என்றும் நெறி பிறழா ர்ேமையராதல் வேண்டும் ; பால் இன்சுவை அளிப் பது; அது அச்சுவைமாறிப் புளிச் சுவை தரும் காலம் வரு மாயினும் கின் அமைச்சர் அறநெறி பிறழ்தல் ஆகாது ; பகல் ஒளி தருவதல்லது இருள் காட்டாது; அதுவும் தன் இயல்பு மாறும் காலம் வரினும் கின் அமைச்சர் அறம். பிழைத்தல் ஆகாது : வேதநெறி என்றும் விழுமிய நெறியே காட்டும் என்ப; அது, தி நெறிகாட்டும் தீமையுடைத் தாய காலம் வந்துறினும், கின் அமைச்சர் கன்னெறி ங்ேகல் கூடாது; அன்னுரை அமைச்சராகக் கொண்டு அரசியல் நடாத்துக” என்று அறிவுரை கூறினர்; ன்ன்னே அவர் அருள் உள்ளம் ! - r + * "பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,

நாஅல் வேத நெறி திரியிலும் திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி - நடுக்கின்றி கிலியரோ.' g (புறம்: உ} முரஞ்சியூர் முடிநாகராயர், இமயமும், பொதியமும் சென்று, ஆங்க்ே அந்தணர் தம் அந்திக்கடனுற்ற எடுத்த, முத்தி விளக்கொளியில், பெண்மான், தன் சிறிய தலையினே யுடைய மறியோடு மகிழ்ந்து உறங்கும் காட்சியினைக் கண்டு. தாம் கண்டு களித்த அக்காட்சியைப் பிறர்க்கும் கவினுறக் காட்டுகிருர் : . . . . . i

சிறுதல் கவ்விப் பெருங்கண் மாப்பின அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தி, விளக்கில்,துஞ்சும் . # பொற் கோட்டு இமயமும், பொதியமும்" (புறம்: -). இப்பாட்ற் பொருளால், புலவர் ஐம்பெரும் பூதன் கிளின் இயல்புணர்ந்த்வர் என்பது புலளுதல் காண்க.