பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூசு. முள்ளியூர் ப் பூதியார்

பூதி, விபூதி, திருறுே என்னும் பொருளுட்ையது, திருநீறு சைவ சமயத்தார்க்குரிய சமயக்குறியாதலின்: இவர் சைவசமயம் சார்ந்தவர் என்ப; இவர் பிறந்த முள்ளி யூர் பற்றி ஒன்றும் தெரிந்திலது இவர் பெயர் சில ஏடு களில் முன்னியூர் வழுதியார் எனவும் வழங்குகிறது. * முள்ளியூர்ப் பூதியார், கன்னன் என்பானேயும், அவன் மலையையும் எடுத்துக் கூறிச் சிறப்பித்துள்ளார். நன்னன் சேரர்குலத் தொடர் புடையவன் ; வேளிர் வழி வந்தவன்; கொண்கான நாடாண்டவன் எழில் மலேயும், பாழிச் சிலம்பும், பாரமும் அவனுக்கு உரியவை பாடி வரும் பரணர் முதலியோர்க்குப் பகைவரை அழித்துப் பெற்ற பெரும்பொருளே, வந்தார்தம் வரிசை யறியாதே வாரி வழங்கும் வள்ளியோன்; பேராற்றலும், பேராண்மையும். உடையவன். இத்துணேச் சிறப்புடைய நன்னன் அளிக்கும் இனிய கறவினேயும் அவன் பெற்றுள்ள தேர்ப்படையின் பெருமையினையும், விண்ணத்தொடும் கொடு முடிகன்யும், பொன்படு பாறைகளையும் உடைய மலேயினேயும் பாராட்டி யுள்ளார் புலவர் : -

"இன்களி நறவின், இயல்தேர் கன்னன்,

விண்பொரு நெடுவரைக் கவாஅன் . . . . . . . . . பொன்படு மருங்கின் மலை" (அகம்: களக அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றலும், கேடுற்ற கேளிமைத் தாங்கிப் போற்றலும் இல்லறத்திருப்பார்க்கு இன்றியமையாக் கடமைகளாம்; அக்க்டமையினே வழு வாது ஆற்றி வெற்றி கோடல் பெரும்பொருள் உடை யார்க்கே இயலும் அப்பெரும் பொருள் சேர்த்தல் உள் ளத்தே ஊக்கம் கொண்டு ஒயாது உழைப்பவர்க்கே இயலும் உடலாலோ அன்றி உள்ளத்தாலோ உழைத்தலின்றி உட் காாந்திருப்பார்க்குப் பெரும் பொருள் சேர்த்தல் இயலாது;

இல்லிருந்து நல்லறமாற்றும் ஆடவர், அவ்வறிவு வரப்பெற்.