பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மாநகர்ப் புலவர்கள்

அவ்வூர்ப் பெயர்களேத்தான்் அறிகிருேமே யன்றி, அவை: யாண்டுள்ளன? அவற்றின் வரலாறு, யாது என்பன வற்றை அறிதற்கில்லே. அவ்வூர்ப் பெயர்களுள் சில, உண்மையில் ஊர்ப் பெயர்கள் தாமா? அல்லது வேறு சிறப் புக் குறித்து, அப்புலவர் பெயரோடு வந்து வழங்கிய அடைமொழிகளா? என்று ஐயுறத் தக்கனவாகவும் சில உள்ளன ; புலவர்களின் வரலாறு, பெண்பாற் புலவர்கள், உவமையாற் பெயர்பெற்றேர், காவலபாவலர், வணிகப் புலவர்கள், கிழார்கள், உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றேர், மதுரைப் புலவர்கள் என்ற பல்வேறு தலைப்பின் கிழ்வகைப்படுத்தி உரைக்கப் பெறுவதால், அவ்வத் தலைப் பின்ழ்ேச் சில புல்வர்களின் ஊர்ப்பெயர்கள் அடங்கி விடும். அவ்வாறு அடங்காத ஊர்களில் வாழ்ந்தார் வர லாறு மட்டுமே சண்டு உரைக்கப்பெறும். இவ்வாறு ஆராய்ந்து கொண்ட எழுபத்தேழு ஊர்களில் வாழ்ந்த நூற்றுப்பத்துப் புலவர்களின் வரலாற்றினே "மாநகர்ப் புலவர்கள்' என்ற வரிசையில் கூறத்தொடங்கி, அவ் வரிசையுள் மூன்ருவது நூலாகிய, இதன்கண், முப்பத் தொன்பது ஊர்களில் வாழ்ந்த ஐம்பது புலவர்களின் வர லாறுகள் உரைக்கப்படுகின்றன. இந்நூலால் அறியப்படும் ஆஊர்கள்: 1. குளம்பு, 2. குறுங்குடி, 3. கூடலூர், கொடிமங்கலம், 5. கோக்குளம், 6. கோட்டம்பலம்,