பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசி ரேனர் 75.

பிற்காலத்தே கொங்கணம் என மருவி வழங்கும் கொண் கானம் என்றொரு நாடு உண்டு : அது இன்றைச் சேலம், கோவை மாவட்டங்களின் கீழ்ப்பகுதிகளைக் கொண்டிருந் ததாம். இந்நாடு பொன்வளம் சிறந்த நாடு எனப் புலவர் களால் போற்றப்பட்டது; 'பொன்படு கொண்கானம்' எனப் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாராட்டுவதும் காண்க. இக் கொண்கான நாட்டில், கொடையும், கொற். றமும் உடையானுெரு தலைவன் இருந்தான்் ; அவனேக். கொண்கானங்கிழான் என்றே மக்கள் அழைத்தனர்; அவன் வண்மையும் ஆண்மையும் விளங்கப் புலவர் பாடிய பாககள பல. - -

'உலகில் உள்ள ஏனேய அரசர்க்குரிய மலைகள் எல்லாம், கொடை கொற்றம் ஆகிய இரண்டு பெருமை களுள் ஒன்றையே பெற்றிருக்கும் கொடையால் சிறப்புற்ற மலை, கொற்றத்தால் சிறப்புறுதல் இல்லை; கொற்றத்தால் சிறப்புற்ற மலை, கொடையால் சிறப்புறுதல் இல்லை; ஆனல் கொண்கான நாடோ கொடை, கொற்றம் ஆக இரண்டாலும் சிறப்புடையதாம்; கொண்கான காட்டைப் பாடிவந்த இர வலர் பரிசுபெறுதல் உறுதியாம், ஆகவே, அவர்க்குத் தாம் முன்கொடுத்த கடனேப் பெற்றுச்செல்வோம் என எண் னியவராய், அவ்விரவலரைத் தொடர்ந்து வந்த அவர் கடன்காரர்களாலும், அக்கொண்கானங் கிழானுக்குத் திறைசெலுத்தி மீளும் அரசர்களாலும் நிறைந்திருக்கும். கொண்பெருங்கானம் எனின், அதன் கொடைக்கும்,. கொற்றத்திற்கும் வேறு சான்று வேண்டாவன்ருே?" எனவும், - -

'ஒன்று நன்குடைய பிறர்குன்றம் என்றும்

இரண்டு நன்கு உடைத்தே கொண்பெருங் கானம்; கச்சிச் சென்ற இரவல்ர்ச் சுட்டித் : தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்்று; கிறையருந்தான் வேந்தரைக் . . திறைகொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே '... (புறம் : கநிசு).