பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக. மோசி சாத்தனுர்

'எயில் காத்தல் நொச்சி' என்ப; தம் கோட்டை யைப் பகைவர் கைப்பற்ருவண்ணம் காத்து கிற்றல் நொச்சி எனப் பெயர்பெறும்; அவ்வாறு கோட்டையைக் காத்து கிற்கும் வீரர் கொச்சித்துணர் அணிதல் அக்கால வழக்கமாம்; நொச்சித் தழை, மகளிர்க்குத் தழை ஆடை யாகப் பயன்படுதலும் உண்டு : அந்நொச்சியே, ஊரைக் காத்துகிற்கும் வேலியும் ஆகும். இவ்வாறு நொச்சி பல் லாற்ருனும் பயனுறும் எனினும், அது எயில் காக்கும் வீரர்க்கு அணியாக விளங்கும் சிறப்பினேயே புலவர்கள் பெரிதும் பாராட்டுவர் புலவர் மோசி சாத்தனர், பகைவர் பாய்ந்து தாக்கியக்கால், தம் எயில் அவரால் பாழாகா வண்ணம் காத்து கின்று, தம் நகர்ப்புறம் அப்பகைவர் கைப்படாவண்ணம் பெரும்போர் ஆற்றி, வீழ்ந்த வீரன் ஒருவனேப் பெருந்தகையாளன் எனப் பாராட்டியதோடு, அவன் சென்னியும் பெருமையாற் பீடுற்றது எனவும், அவன் சென்னியில் அணியும் உரிமை உடைமையால் நொச்சியும் பீடுற்றது: உலகில் உள்ள எல்லா மரங்களி னும் இறப்ப உயர்ந்தது எனவும் பாராட்டியுள்ளார்.

இதல்ை புலவர் கொண்டுள்ள ஊர்ப்பற்றும், ஊரைக் காக்க உயிர்விடும் உயரிய வீரர்பால் அவர் காட்டும் பெரு மதிப்பும் நன்கு புலனுதல் காண்க.

'மணிதுணர்ந் தன்ன மாக்குரல் கொச்சி !

போதுவிரி பன்மா னுள்ளும், சிறந்த காதல் நன்மரம் நீ ;............ -

காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலின், ஊர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையும் கினதே."

- (புறம்: உஎஉ}

lor. 14.–III-6