பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.உ. வாயிலான் தேவன்

தேவன் என்ற பெயருடையார் பண்டும் இன்றும், பலராவர் ; கடுகு பெருந்தேவன், பூதன்தேவன், பெருந் தேவன் முதலாய பெயர்களைக் காண்க. வாயில் இளங் கண்ணன் என்பாரைப் போன்றே, இவரும் வாயில் என்ற ஊரிற் பிறந்தவராவர்.

கார்காலத்தே வருவேன் எனக் கூறிச்சென்ற தலைவன், வாடை வீசும் கூதிர்க்காலத்தும் வந்திலன் என வருந்திய தலைமகள், இவ்வாடையின் கொடுமையால், இரை தேர்ந்து உண்ணும் இயல்பினவாய நாரைகளும் தம் தொழில் ஒழிந்து உறையும் கூதிர்க்காலமாம் இது இக் காலத்திலும், நம் தலைவர் மட்டும் தாம் மேற்கொண்டு சென்ற வினையை விடுத்து வாராதது ஏனே என வருந் திள்ை எனப் பாடிய பாட்டு அவர் புலமை நலத்தினேப் புலப் படுத்தி:கிற்றல் காண்க. .

'இரைதேர். காரைக்கு எவ்வ மாகத்

தூஉம் துவலேத் துயர்கூர் வாடையும் வாரார் போல்வர் நம் காதலர்." (குறுங் : கoகூ)

முல்லை நிலம், செம்மண் நிறைந்த காதலின், அச்செக் கிலத்தே மலர்ந்த வெண்ணிற முல்லே, செவ்வானத்தே தோன்றும் வெண்ணிற மீன்போலும் என்பார், முல்லை, செவ்வானத்துச் செவ்வியினேக்கொண்டது எனக் கூறிய கயம் காம் போற்றும் தன்மையதாம். -

"பாசிலே முல்லை ஆசில் வான்பூச் . . . . .

செவ்வான் செவ்விகொண் டன்று.” (குறுங்: கoஅ)