பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு. விற்றுாற்று மூதெயினனுர்

விற்றுாறு, புலவர் பலர் வாழ்ந்த பெருமையுடையது: இவ்வூரிற் பிறந்த வண்ணக்கன் தத்தன் என்பாரின் பாட். டொன்று நற்றிணைக்கண் இடம்பெற்றுளது; மூதெயி னனர் என்ற பெயரால் இவர் வேடர் மரபினர் என்பதும், அறிவாலும், ஆண்டாலும் பெற்ற முதுமையாற் புகழு. டையார் என்பதும் புலம்ை. இவர் பெயர் முத்துாற்று: மூதெயினனர் எனவும் ஏடுகளில் காணப்பெறும்.

கடலைச் சார்ந்துள்ள கானற்சோலைகளில், விரைந்து சுழன்று அடிக்கும் கடல்காற்ருல் மலேபோலும் மணல் மேடுகள் உண்டாம் எனவும், அம்மணல் மேடுகளால் ஆங்குள்ள மரங்கள் எல்லாம் மறைந்துபோம் எனவும்: அவர் கூறியன எத்துணை உண்மையாம் என்பதைத் திருச் செந்துார்க் கடற்கரையினேயும், குமரிமுனேயில் அமைந்த மணல் மலையினேயும் கண்டார் நன்கு உணர்வர்.

"பக்னத்தலேக் கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக்

கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் கணங்கொள் சிமைய அணங்கும் கானல்..' (குறுங் : டஎஉ): பண்டைத் தமிழர்கள், தம் மக்களுக்கு மணவினே செய்யத் தொடங்கி, இறைச்சி கலந்து ஆக்கிய நெய்மிக்க வெண்சோற்றை மணம்குறித்து வந்தார் அனேவருக்கும். வரையாது வழங்கி விருந்தாற்றி, கிமித்தம் நல்லன ஆதல் கண்டு, திங்களேக்கூடிய உரோகிணி நன்னுள் வரக் கண்டும், மணம் நிகழும் தங்கள் மனேயினே மாண்புறப் புனேந்து, வழிபடு கடவுளர்க்கு வழிபாடாற்றி, மனமுர சோடு வேறுபல முரசங்களும் முழங்கத் தலைவிக்கு மண ரோட்டி, வாகை இலையினே அறுகம் புல்லின் கிழங்கோடு கட்டிய மாலேயினே மணமக்களுக்குச் சூட்டி, அாய ஆடை யினேயும் அளித்து, மழையொலிபோலும் வாழ்த்தொலி முழங்க, தமர் தலைமகளைத் தலைமகனுக்கு அளிக்க மணவினே முடிப்பர் அன்றை இரவே மணமக்கள் பள்ளியறை புகுவர் எனக்கூறும் பழந்தமிழர் தம் மணமுறையின மக்கன் உணரவைத்த மாண்பினைப் போற்றுவோமாக!