பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரை வெளியன் தித்தனர் 91.

தலைவன் வரையாது வந்து செல்வதால் ஊரில் அலரெழ, அதனுல் தலைமகள் வருந்தும் வருத்தம் கண்டு அஞ்சிய அவள் தோழி, தலைமகன் ஒருநாள், தம் வீட்டின் புறத்தே வந்திருந்தான்ுக, அவன் கேட்குமாறு, பெருங்" கடல் நீர் கொண்டுவரும் மேகத்தை நோக்கி, 'மழையே!” நீ இடியும், மின்னலுமாக வந்து ஆரவாரம் செய்துவிட்டுப் பெய்யாது வீணே செல்ல எண்ணமோ, அல்லது, எம் தலை" மகள் காத்துகிற்கும் தினேப்புனம் செழிக்குமாறு பெரு. மழை பெய்ய எண்ணமோ எதுவோ கின் எண்ண்ம் ?” என்று கேட்பாளாய், மறைத்துமொழி கிளவியால், தலே மகனே நோக்கி, "தலைவ! இவ்வாறு இடைவிடாது வந்து, பயனின்றி அலர் எழுப்புவது கின் எண்ணமோ அல்லது, இவள் கவின் பெறுமாறு அருள்மழை பொழிந்து மணந்து மகிழ எண்ணமோ ? யாதோ கின் எண்ணம் ' எனக் கேட்டாள் என்று பாடிய விரை வெளியன் தித்தனரின் புலமை கலம் புகழ்தற் குரியதாமன்ருே?

'மின்னுடைக் கருவியை யாகி, நாளும் கொன்னே செய்தியோ அரவம் ?......

குறமகள் காக்கும் எனல் புறமும் கருதியோ ? வாழிய மழையே!' -

(அகம் : க.அ.அ):