பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளேக்குடி நாகனுள் 93.

அரசியலே ஏற்றுகின்ற குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், ஆட்சிப்பொறுப்பைத் தான்ே முன்னின்று மேற். கொள்ளாமையாலோ, அல்லது தனக்குத் துணேகின்று ஆட்சி நடாத்தும் அரசியல் அலுவலராக, அறநெறி அறியா தார் சிலரை மேற்கொண்டமையாலோ தம் நாட்டு ஆட்சிக்கு அழிவு வந்துறுமோ என அஞ்சவேண்டிய நிலை வந்துற்றதைப் புலவர் அறிந்தார்.

புலவர் காட்டுப்பற்று மட்டும் கொண்டு அந்நாட்டினே கன்னிலைக்கண் நாட்டுதற்காம் நல்லறிவும், அங்கல்லறிவின் துணைகொண்டு ஆவன ஆற்றும் அருந்திறனும் அற்றவ ரல்லர் ஆதலின். அவ்வரசன் முன் சென்று அவன் அறியா மையினேயும், அவ்வறியாமையால் உண்டாம் ஆக்கக் கேட்டி னேயும் எடுத்துக்காட்டித் திருத்தும் அஞ்சாமையும் உடையராயினர். *

புலவர் காலத்தில் ஒர் ஆண்டில், சோழ நாட்டு கிலங்கள் மழை இன்மையாலோ, பெருமழை பெய்தமை யாலோ, வேறு எக்காரணத்தாலோ விளையாதொழிந்தன; அரசன் இறையாகப் பெறவேண்டுவது கிலம்தரும் விளவில் ஆறில் ஒன்றே ஆதலின், விளேயாக ஆண்டில் அரசன் இறை வாங்காது விடுத்தல் வேண்டும். ஆனால், அரசியல் அலுவலர் அவ்வாறு செய்யாது, அதைக் கடனுகவே கருதி' அடுத்துவந்த ஆண்டில் அதையும் சேர்த்துத் தண்டுவா ராயினர்; குடிகள் அது தவறு என்பதை அவர்கள்பால் எடுத்துக்கூறவும் அவர்கள் கேளாராயினர்; அலுவலர் செய்யும் அறமல்லா இச்செயலே அரசன்பால் கூற எண்ணிய குடிகட்கு அரசனேக் காணல் அரிதாயிற்று; இங்கிலேயில் வருந்திய சோணுட்டுக் குடிகளுள் ஒருவராய நாகனர், வாளா இராது, தம் புலமை தமக்களித்த உரிமையால் அரண்மனையுட்புக்கு அரசனேக்கண்டு அறிவுரை கூறுவா ராயினர். - i r - . . . .

வலியாரும் மெலியாரும் கலந்துவாழும் உலகில், மெலியார், வலியரால் கலிவெய்துதல் நாட்டில் எங்கும்.