பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 7 காார் ” எனவும், செம்பு கொண்டு கலன் புனைந்து கரு வோரைச் செம்பு செய்குநர் ’ எனவும், சிற்பநூல் வல்லாரை மண்ணிட்டாளர்” எனவும், தையல் தொழி லாளரை துன்னகாரர் ” எனவும் பெயரிட்டுப் போற் றினர்; இவர்களே அன்றி, மரங்கொல் தச்சர், கருங்கைக் கொல்லர், பொன்செய் கொல்லர், நன்கலம் தருகர் முதலாம் கம்மாளர்களும் இருந்தனர். தமிழர்கள், தங்கள் நாட்டுத் தொழில்வளம் பெருக இத்தகைய தொழிலாள ரைப் போற்றியதோடு அமையாது, பிறநாட்டுத் தொழில் அறிஞர்களை அழைத்துத் தங்கள் தொழில்களை வளர்த்துக் கொள்வதிலும் முன்னின்றனர்; அவ்வாறு அழைக்கப் பெற்ற பிறநாட்டுத் தொழிலாளர்கள், தமிழகத்துத் தொழிலாளர்களோடு ஒற்றுமையாய் வாழ்ந்து இக்காட்டுத் தொழிலை வளர்த்தனர்:

  • மகத வினைஞரும், மராட்டக் கம்மரும்,

அவந்திக் கொல்லரும், யவனத் தச்சரும், தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் - கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை.” எனப் புலவர்களாலும் போற்றப்பட்டுளது அச்செயல். தமிழகத்தில் தொழில்கள் மிகப் பலவாகப் பல்கி யிருப்பினும், அவற்றுள் மிகமிகச் சிறப்புடைய தொழில் கள் ஆடை நெய்தல், இரும்புத்தொழில், பொற்ருெழில் க்ளே ஆகும். தமிழகத்தின் ஆடைகளுக்குப் பிறநாடு களில் தேவை மிகுதியாக இருந்ததால், அத்தொழிலில் அக்கால மக்கள் தங்கள் முழுக் கருத்தையும், செலுத்தி யிருந்தனர். தமிழ்ச்சங்க காலத்தே அரசர்கள் ஒருவரோ டொருவர் பகைகொண்டு போர் செய்வதே தொழிலாய், இருந்தமையால், அவ்வரசர்களுக்கு வேண்டும் வில்லும், அம்பும், வாளும், வேலும் போன்ற படைக்கலங்களைச் செய்துத ஊர்தோறும் கொல்லர்கள் பலர் வாழலாயினர். அக்கால அரசர்களும், அவர்கள் மனேவிமார்களும், எனேய செல்வர்களும் வகை வகையான அணிகளை அணிவதில் ஆர்வமுடையவராய் இருந்தனராதலின், செல்வர்களும்,