பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வணிகரிற் புலவர்கள் வானம் தண்துளி தலைஇ ஆனது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் பஉேம் புணைபோல், ஆருயிர் முறைவழிப் பஉேம், என்பது, கிறவோர் காட்சியில் தெளிந்தனம் ; ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே ; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம் : க.க.உ.) கணியன் பூங்குன்றனர் காட்டும் இவ்வரிய உண்மை களே, இவ்வுலகம் உணர்ந்து உய்தி பெறுவது எங்காளோ ? அவர் கணித நூல் கூறும் கருத்து யாதோ ! உலகத்தார் உய்தற்பொருட்டு உயரிய அறவுரைகளை வழங்குவதே பொருளாகக்கொண்ட பொருண்மொழிக் காஞ்சியாம் புறத்துறை தழுவிய புறநானூற்றுப் பாடலில், பொருள் நிறைந்த அறவுரைகளே அளித்த, கணியன் பூங் குன்றனர், ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் அன்பு வாழ்க்கையினை உரைப்பதே பொருளாகக் கொண்டுவரும் அகத்துறைப் பாட்டிலும், உலகியலுரைக்கும் அறவுரை - களை வழங்கியுள்ளார். - தலைவன், நாளது சின்மையும், இளமையது. அரு மையும் அறியானுய்ப் டொருளையே விரும்பிய உள்ளத் தனுய்த் தலைவியை விட்டுப் பிரிந்து சென்று விட்டான்; அவன் பிரிவுத்துயர் பொறுக்க மாட்டாது வருந்தும் தலை மகளைப் பொறுத்தல் சின் கடன் எனக்கூறி ஆற்றுவிக்கும் தோழியை நோக்கி, தோழி மருந்தாகிப் பயன்படும் ஒரு மரத்தை, அம்மாம் பட்டுப்போகுமாறு முழுவதையும் வெட்டிக்கொள்வதில்லை; அவ்வாறு கொண்டால், அம்மரத் தால் மீண்டும் பயன் பெறுதல் இயலாது; ஆதலின் அம் மரம் மேலும் வாழுமாறு சிறிது விட்டே வெட்டிக் கொள்வர்; உடலை வருக்கித் தவம் செய்வோர், தம் உட லுரன் முற்றும் குன்றுமளவு தவம்மேற் கொள்ளார்;