பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வணிகரிற் புலவர்கள் உவலைக் கடரை ஒழுகிய தெருவில் கவலை முற்றம் காவல் கின்ற தேம்ப்டு கவுள சிறுகண் யான்ை ஒங்குகிலேக் கரும்பொடு, கதிர்மிடைந்து யாத்த வயல்விளை இன்குளகு உண்ணுது, துதல்துடைத்து அயில்துனே மருப்பில்தம் கையிடைக் கொண்டெனக் கவைமுட் கருவியின், வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்ப' (முல்லைப் : உக-டசு), போாாற்றிப் பாசறைபுக்க பகையரசன், அன்று. நடந்த போரில், பகைவர் ஒங்கிவெட்டிய வாளால் புண் பெற்று, தம் பிடிகளை மறந்து மாண்டுபோன யானைகளே யும், பகைவர் படையினைச் சேர்ந்த யானைகளின் கைகள் பெருமலைப் பாம்புகள் புரளுமாறுபோல் அறுந்து வீழ்ந்து புரளுமாறு வெட்டி வெற்றியைத் தேடித்தத்து தம் செஞ் சோற்றுக் கடன் கழித்த கடமைதவரு வீரர்களேயும், శi}&; வர்களின் அம்புகள் தைக்கப் பெற்றமையால் வருக்கி, கிமிர்ந்த தம் செவிகளைச் சாய்த்துக்கொண்டு புல்லுண்ணுது வாடும் தன் குதிரைகளையும் எண்ணி எண்ணி வருந்தி, இவ்வாறு பாழ்பட்ட படையினேக்கொண்டு நாளே எவ்வாறு போராற்றுவேன் என்ற கவலையால், உள்ளமும், உடலும் தளர்ந்து, அத் தளர்ச்சியால், ஒருகையை அமர்ந்திருக்கும் புள்ளியில் ஊன்றிக்கொண்டு, ஒருகையால், முடிவிளங்கும் தன் தலையினைத் தாங்கிகிற்கும் தாழ்நிலையினை உயிரோவிய மாக்கித் தந்துள்ளார் : . . . "எடுத்தெறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப் - பாம்பு பதைப்பன்ன் பரூஉக்கை துகியத் - தேம்பாய் கண்ணில்வலம் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோர் உள்ளியும், தோல்துகி.பு வைத்துனைப் பக்ழி மூழ்கலின், செவிசாய்த்து, உண்ணுதி உயங்கும் மாசிந்தித்தும், * . . ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை முடியொகி கடகம் சேர்த்தி கெடிதுநினைந்து (முல்லைப்: ஈஅ-எசு).