பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனுர் துேரையென விரிந்ததுண்பூங் கலிங்கம்.” 'கோக்கு துழைகல்லா நுண்மைய, பூக்கனிந்து அாவுரி யன்ன அறுவை.' - ' பாம்புரி யன்ன வடிவின ; சாம்பின் கழைபடு சொலியின் இழையணி வாா ஒண்பூங் கலிங்கம்.” - - 'புகைமுகக் தன்ன மாசில் தாவுடை: * புகைவிரிக் தன்ன பொங்கு துகில்.’ ' கொட்டைக் காைய பட்டுடை.” - ' நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதி.' سم 'பட்டினும் மயிரினும் பருத்தி நூலிலும் கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கை.” 'கண்ணுழை கல்லா நுண்ணும் கைவினை வண்ண அறுவையர் வளந்திக்ழ் மறுகு.” அறுவை பற்றியும், அவ் வரவைத்தொழில் மேற் கொண்டார் வாழும் இருக்கை பற்றியும் பழங் தமிழ்ப் பாடல்கள் அளிக்கும் பாராட்டுரைகள் இவை; மதுரையில், மாண்புற்ற அங்காடியில் அமர்த்து, இத்தகைய போற்றுதற் குரிய அறுவை வாணிகம் மேற்கொண்டு வாழ்ந்து மேன்மையுற்றவர் புலவர் இளவேட்டனர். இவர் பெயர், மதுரை அறுவை வணிகளுர் இளவேட்ட்னர் என, ஊரும், தொழிலும் உணரவும், அவை உணரலாகா கிலையில் இளவேட்டனர் எனவும் ஏடுகளில் காணப்படும். பாண்டிய அரசர் பலர் வாழ்ந்த மதுரையில் பிறந்து வாழ்ந்து, அவ் வாசர்களோடும், அவர்களால், பிற தமிழாசர்களோடும் தொடர்புகொண்டிருக்க வேண்டிய புலவர் இளவேட்டனர், தாம் பாடிய பத்துக்கும் மேற்பட்ட பாக்களில், ஒன்றிலேனும், அவ் வாசர்களுள் ஒருவரை