பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வணிகரிற் புலவர்கள் கண்ணகியார்க்கு உற்ற கடுந்துயர்க்காரணம், அவள் முன்னே வினையே என மதுரைமா தெய்வம், அக்கண்ணகி யார்க்கு எடுத்துரைத்ததை, வெள்ளியம்பலத்தே இருந்த தாம் நேரிற் கேட்டதாகவும் கூறினர். அவள் வரலாறு கேட்டு வியந்த அடிகளார், அவ்வரலாற்றினை ஒரு நூலாக ஆக்கிப் பாராட்டுதல் வேண்டும் என்று விரும்பினராக, இவ்வரலாறு, மூவேந்தர் நாட்டினும் நிகழ்ந்தது; மூவர்க்கும் உரியது; ஆதலின் அடிகள் நீரே அத்தகையதொரு நாலே க்குக' என்று வேண்டிக்கொண்டார்; அவரும் அல் வாறே சிலப்பதிகாரம் என்னும் பெயரால், பாட்டுடைச் செய்யுளொன்றை எழுதி, அந்நூல் எழுதக் காரணமாய கூலவாணிகன் சாத்தனர் தலைமையில் அரங்கேற்றமும் செய்து முடித்தார். சாத்தனர் கண்ட கனவும் நனவா ற்று, கண்ணகி சொல்லாலாய கோயிலுள் அமர்ந்து அழியா நிலையுற்ருள். கண்ணகிக்குக் கோயிலும், காவியமும் தோன்றத் துணை புரிந்த சாத்தனர் செயலை இளங்கோவடிகள் தம் முடைய காவியத்தில் வைத்துப் போற்றியுள்ளார். 'மண்களி நெடுவேல் மன்ன்வற் கண்டு கண்களி மயக்கத்துக் கள்தலோ டிருந்த தண்டமிழாசான் சாத்தன் இஃதுரைக்கும்.' - - - (சிலப். உடு: சுச-சு) "அவனுழை இருந்த தண்டமிழ்ச் சாத்தன் யானறி குவன் அது பட்டதென் றாைப்போன் .............................மதுரை மூதார்க் கொன்றையம் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன் கோட்டமில் கட்டுரை கேட்டனன் யான் ೯r೯೮r, • * *** **** * * *--- - - - - - - - - - - - - - - - - - சிலப்பதி காா மென்னும் பெயரால் ாாட்டுதும் யாமோர்பாட்டுடைச் செய்யுள்என