பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கால் பொற்கொல்லன் வெண்ணுகனர் 49. வேறு நல்ல புதிய உணவுகளோடும் சேர்த்து, பாணர்க்கும், அப் பாணரோடு வந்த பிறர்க்கும் அளித்து மகிழும் மாண்புடையள்; அவள் கணவனும், போர்க்களம் புகுந்து, கடும் போரிட்டு, அப் போரில் எதிர்கின்று பொரும் ஆற்றல்நிறை யானைகளை அடித்துக் கொன்று, அவற்றின் தலையில் அணிசெய்து விளங்கும் பொன்னுலாய பட்டம் முதலாம் அணிகளைக் கொணர்ந்து பாணர்க்குரிய பரிசில் அளித்து வாழ்வன் எனப் போற்றிக் கூறியுள்ளார் : மனைவியும், வேட்டச் சிரு.அர் சேட்புலம் படராது படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் விழுக்கு கினம்பெய்த தயிர்க்கண் மிதவை யாணர் கல்லவை பாணரொடு ஒராங்கு - வருவிருத்து அயரும் விருப்பினள்; கிழவனும் அருஞ்சமம் கதையத் தாக்கிப் பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த - பொன்செய் ஒடைப் பெரும் பரிசிலனே.” (புறம்: உஉசு) - இவ்வாறு மறக்குடியினரின் மாண்புரைக்கும் அச் செய்யுளிலேயே, இராக்காலத்தே, ஊரைச் சூழவுள்ள வேலியடியில் பதுங்கியிருந்து தாக்கும் காட்டுப் பூனேயை, அஞ்சிய பெட்டைக்கோழி, நடுக்கம் கொண்டும், பெரு மூச்சு விட்டும், தொண்டையைத் திறந்து கூவியும் அலறி கின்று, தாம் தொழிலாற்றுங்கால் தம்மீது படிந்த பஞ்சின் துரசுகளை உதறிப் போக்கிவிட்டு எழுந்துவரும் பருத்திப் பெண்டிரின் கையில் உள்ள விளக்கொளியால், தன் சேவற். கோழி , தன் அருகிலேயே இருப்பது கண்டு அச்சம் ஒழிந்து வாழும் எனக் கூறிய அச் சிற்றார் இயல்பு இன்பம் பயந்து கிற்கிறது : - - - - - - “ ஊர் முது வேலிப் பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகிளம் ப்ேடை, உயிர்.ாடுக்குற்றுப் புலாவிட் டாற்றச் சிறையும், செற்றையும் புடையுகள் எழுந்த பருத்திப் பெண்டின் சிறுதி விளக்கத்துக் கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்.’ (புறம்: க.உக) வ. பு.-4 - -