பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகரிற் புலவர்கள் سسسسسمي مسسسسس ஒ தோற்றுவாய் உலகில், தலைசிறந்த நாடுகள் என இன்று போற்றப் பெறும் நாடுகள் எல்லாம், மக்களால் அறியவும்படாமல் இருள் நிலைபெற்றிருந்த மிகப் பழைய காலத்திலேயே, தமிழகம் உயரிய வாழ்வுபெற்ற நாடாய்ப் பெருமையுற்று விளங்கியிருந்தது; நாடு செல்வத்தில் சிறந்து வாழவேண்டு மாயின், அது வாணிபத்துறையில் வளம்பெற்றுத் திகழ் தல்வேண்டும்; உள்நாட்டு வாணிபத்தினும், வெளிநாட்டு வாணிபத்தையே மிகுதியாக மேற்கொண்டிருத்தல்வேன் டும்; விலையுயர்ந்த பொருள்களை வெளிநாட்டிலிருந்து தான் வாங்காமல், அப்பொருள்களைப் பிறநாடுகளுக்குத் தான் அனுப்பும் நாடாக இருத்தல்வேண்டும்; பொருள்களைக் கொடுத்துப் பொன்னைப் பெறவேண்டும்; பொன்னேக் கொடுத்துப் பொருள்களைப் பெறுதல் கூடாது; அதற்கு ஏற்றவகையில், வகைவகையான தொழில்களை வளர்த்து வளம்பெருக்கும் நாடாக ஆக்குதல் வேண்டும். பிறநாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவர்கள் விரும்பும் வகை யில் அவற்றை அமைத்து அளித்தல் வேண்டும்; இவ்வா றெல்லாம் கூறுவர் பொருள்.ாற் புலமை பெற்றேர். இவ்வுண்மைகளே உள்ளவாறுணர்ந்து, அதில் சிறிதும் பிறழாது பேணித் தம் நாட்டு வாணிபத்தை வளர்த்த வர்கள் தமிழர்கள். - 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கம் செய்தல் வேண்டும்”