பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வணிகரிற் புலவர்கள் என்ருர் பாரதியார். தமிழ்நாட்டு வாணிப வளத்தினைத் தமிழ்ப்பெரும் நூல்கள் போற்றுகின்றன என்பதோடு, அவ்வாணிப வளத்தைத் தமிழர்களின் வாணிபத்தால் வளம்பெற்று வாழ்ந்த பிறநாட்டுப் பெரியார்கள் பலர் போற்றியுள்ளனர் என்பதையும் உலக மக்கள் அறிந்துள்ள னர்; தமிழகத்தின் வாணிபச்சிறப்புதான் என்னே ! தமிழகத்தின் வணிக வரலாறு இலிகமிகப் பழமை யுடையது. இந்தியப் பெருங்கடலில் கலம் செலுத்தி, எகிப்து, பாபிலோன், சால்டியா போன்ற முதிர்ந்த நாக ரிகம் பெற்ற மிகப்பழைய நாடுகளோடு பல்லாயிரம் ஆண்டு கட்கு முன்னரே தமிழர்கள் வாணிகம் புரிந்து வந்தனர். எகிப்து நாட்டிலும், சிற்ருசியாவிலும், மெசபடோமியாவி லும், மண்ணினுள் புதையுண்டிருந்து இப்போது எடுக்கப் பெற்ற பல பொருள்கள் அதற்குச் சான்று பகர்ந்து கிற்கின்றன; கி. பி. முதலாம் நூற்ருண்டிலிருந்து நான்காம் நூற்ருண்டுவரை, தமிழர்கள், உரோமப் பேரரசோடு வாணிபம் மேற்கொண்டிருந்தனர்; உரோமரும், கிரேக் கரும், தமிழகத்தோடு வாணிபம் மேற்கொண்டிருந்ததைப் பற்றி விளங்கக்கூறும் நூல்கள் பல. அவற்றுள், கிரேக்க. வணிகர் ஒருவர் எழுதிய “செங்கடற் செலவு” (Periplus of the Erythrean Sea) arsip Taylin, Airawus arsiruri எழுதிய 'உலக நால்” என்ற தாலும், பிளைனி என்பார் எழுதிய “இயற்கை நூல்' என்ற நூலும் தலைசிறர். தனவாம. பருவக்காற்றுநிலையினே அறிந்து பயன் கொண்ட தும், உரோம்நாட்டு மக்களின் நாகரிகவாழ்க்கையின் தேவைகளும், தமிழகத்திற்கும், உரோம் முதலாம் நாடு களுக்கும் இடையே நடைபெற்றுவந்த வாணிபம் வளரத், துணைபுரிந்தன; இவ்வாணிபத்தின் வழியாக, உரோமப் பேராசு, ஆண்டுதோறும் 10,87,500 பவுன்கள் மதிப் புள்ள பொன்னையும், வெள்ளியையும் கீழ்நாடுகளுக்குக் கொடுத்து வந்தது எனின், அக்கால வாணிபம் எத்தனைப்