பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வணிகரிற் புலவர்கள் செய்துவிட்டேன் நான் ” என்று செய்துவிட்டு வருங் தும் அறிவிலாதவள் அல்லள் நான் ; எற்றென்று இரங்குவ செய்யேன் என்றும், அவ்வாருகவும், இன்று உயிரிற் சிறந்த நாணயும், உயிர் ஒத்த நட்பையும் இழந்தவர் உலகத்தில் என்னலது இலர்.” என்று தோழி கூறினுள் எனப் பாடியுள்ளார் : X- - 'அறியாய் வாழி! தோழி............ மாமலே நாடனெடு மறுவின்முகிய காமம் கலந்த காதல் உண்டெனின் கன்று மன் , அது நீ நாடாய் கூறுதி : நானும் கட்பும் இல்லோர்த் தேரின் யானலது இல்லை இவ்வுலகத் தானே : இன்னுயிர் அன்ன நின்னெடும் குழாது. செய்து பின் இரங்கா வினையொடு மெய்யல பெரும்பழி எய்தினேனே.” (அகம் : 268) தலைவன் உறவு நன்று என்று கூறுவதை எலாது தலைமகள் தானியதல்ை, தோழி, இவ்வுலகில் யானே நாணில்லாதவள் என்றும், கெழுதகைமையால் கேளாது செய்ததற்கு இசைந்து மகிழாது, மறுத்துரைத்தமையின், பானே நட்பில்லாதவள்,” என்றும் கூறினுள்; தான் செய் வன எதையும் பலகாலும் எண்ணியே செய்வதால், தன் செயல் பழியுடையதாகாது என்ற உறுதியுடைமையால், தன்னைப்பற்றிக் கூறும் பழிச்சொல், பெரிதேயாயினும் அது உண்மையல்லாப் பொய்ப்பழியாம் என்றும் கூறி ள்ை. இத்துணை அறிவுடையளாய ஒருபெண்ணைப் படைத் தளித்த பெருமை புலவர் பேரி சாத்தனர்க்கே உரித்து.