பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. வண்ணக்கன் சொரு மருங்குமரனுர் நாணய ஆய்வாளராக இருந்துகொண்டே தமிழறிவு: பெற்றிருந்த புலவர் கால்வரைக் குறிப்பிடுங்கால், அவர் கள் வடநாட்டினின்றும் வந்து குடியேறிய வடம வகுப் பினர் என்பதை அறிவிக்கும் வடம என்ற சொல்லை, அவர் கள் பெயரோடு இணைத்து வழங்கியதைப்போல், இவர் பெயரோடு இனத்து வழங்காமையால், இவர், அவ்வாய் வாளர் தொழில் மேற்கொண்டவரேயாயினும், அவர் களைப்போல் வடநாட்டினின்றும் வந்தவரல்லர் , தமிழகக் தவரே என்பது உறுதியாம். தமிழ்நாட்டில் பிறந்தார் சிலரும், அங்காணய ஆய்வாளர் தொழில் மேற்கொண்டி ருந்தனர் என்பதற்கு, கம்பூரில் பிறந்து, கிழார் எனும் பட்டம்பெற்று, புதுக்கயம் என்ற ஊரிலே இருக்கு அத் தொழில் மேற்கொண்டிருந்த, புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழாலும், விற்றாற்றில் வாழ்ந்து அத்தொழில் மேற்கொண்டிருந்த, தத்தனரும் சான்று பகர்ந்து கிற்றல் காண்க. - இவ்வண்ணக்கர் பெயராக வழங்கும் சொருமருங் கனுர் என்பது எக்காரணம் பற்றி வந்தது என்பது புலனுக வில்லை. களவொழுக்கம் மேற்கொண்ட தலைமகன், கடுமா வழங்கும் காட்டுவழியில் வருவதற்கு அஞ்சி, அவ்வாறு வருதல் நன்றன்று, வரைந்துகொண்டு உடனிருந்து வாழ்க என வரைவு கடாவும் துறையமைந்த ஒரு செய்யுள் சுற்றிணையில் வந்துளது. இவர் வரலாருக நாம் அறியத் தக்கன இவ்வளவே. (நற்: உண்டு.)